என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கரும்பு விவசாயி"
- கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3016.25 கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கரும்பு விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை:
சர்க்கரை ஆலைகளுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான அரவை பருவத்துக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.253.70 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3016.25 கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1.45 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
- சுமார் 8 ஆயிரம் ஏக்கரில் விளைந்த கரும்பு பயிர்கள் முழுமையாக பாதிப்படைந்துள்ளது.
- கரும்பு சாகுபடி விவசாயிகளுக்குத் தேவையான பூச்சி மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வட தமிழகத்தில் கரும்பு சாகுபடிக்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் முன்னனியில் உள்ள மாவட்டங்களாகும். எனவேதான், இப்பகுதியில் சர்க்கரை ஆலைகள் அதிகம் உள்ளன. ஆனால் வேளாண்மைத் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான கடலூரில் இந்த ஆண்டு சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்ட நிலையில், மஞ்சள் அழுகல் நோய், வேர் புழு நோய் போன்ற நோய்கள் தாக்கியும், மற்றும் காட்டுப் பன்றிகளின் தொல்லையாலும், சுமார் 8 ஆயிரம் ஏக்கரில் விளைந்த கரும்பு பயிர்கள் முழுமையாக பாதிப்படைந்துள்ளது.
எனவே, அரசின் வேளாண்மைத்துறை அமைச்சர், தமிழகம் முழுவதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்பி வைத்து, கரும்பு சாகுபடி மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கணக்கெடுத்து, ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும். கரும்பு சாகுபடி விவசாயிகளுக்குத் தேவையான பூச்சி மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும். காட்டுப் பன்றி தாக்குதலில் இருந்து பயிரிடப்பட்டுள்ள கரும்புகளைக் காப்பாற்றுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்