என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிலம் அபகரிப்பு புகார்"
- இடத்தை அபகரித்து வைத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று புகாரில் கூறியிருந்தார்.
- மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கவுதமி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனரான மகேஸ்வரியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் ரூ.25 கோடி மதிப்பிலான தனது நிலத்தை கட்டுமான அதிபரான அழகப்பன் அபகரித்துள்ளதாக குற்றம்சாட்டி இருந்தார்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ரூ.25 கோடி மதிப்பிலான 60 ஏக்கர் நிலத்தை எனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் எனது சிகிச்சைக்காக விற்பனை செய்ய முடிவு செய்தேன். இதற்கு உதவி செய்வதாக கட்டுமான அதிபர் அழகப்பன் கூறியதை தொடர்ந்து அவருக்கு அதிகாரம் வழங்கினேன்.
ஆனால் அவர் இடத்தை அபகரித்து வைத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று புகாரில் கூறியிருந்தார். இதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அழகப்பன் மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்ட ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர் மீது நடவடிக்கை பாய்கிறது.