search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணையாழி"

    • கணையாழியைக் கண்டதும் சீதை மகிழ்ந்து உள்ளம் நெகிழ்ந்து போனாள்.
    • தன் ஆடையிலிருந்து சூடா மணியை அனுமனிடம் சீதை கொடுத்தாள்.

    அசோகவனத்தில் சீதை காணப்பட்டாள். சீதையைக் கண்டதும் அனுமன் ஆடினார், பாடினார், மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்.

    "உயிர் விடும் தருணத்தில் ராம நாமம் சொல்லி என்னைக் காப்பாற்றிய வீரா நீ யார்?" எனக்கேட்டாள். சீதை.

    "அன்னையே நான் ராம தூதன். என் பெயர் அனுமன். ராமபிரான் உங்கள் நினைவாகவே எப்போதும் இருக்கிறார்.

    உங்களுடைய நகைகளைப் பார்த்து ஆறுதல் அடைந்து வருகிறார் என்றார்.

    ராமர் கொடுத்தனுப்பிய கணையாழியை சீதையிடம் கொடுத்தார் ஆஞ்சநேயர்.

    கணையாழியைக் கண்டதும் சீதை மகிழ்ந்து உள்ளம் நெகிழ்ந்து போனாள்.

    "தாயே நான் திரும்பிப் போய் ராமனிடம் சொல்ல வேண்டிய செய்தி யாது?" எனப் பணிவுடன் கேட்டார் ஆஞ்சநேயர்.

    அதற்கு சீதை, "நான் இன்னும் ஒரு மாத காலம்தான் உயிர் வைத்திருப்பேன்! இதை என் நாயகன் ராமன் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன்.

    ஒரு மாதத்திற்குள் ராமன் வந்து என்னை மீட்காவிட்டால் நான் இறந்து போவது நிச்சயம் என்று கூறுவாய்" என்றாள் சீதா.

    ராமனுக்கு நம்பிக்கை உண்டாக்குமாறு தன் ஆடையிலிருந்து சூடா மணியை அவரிடம் கொடுக்குமாறு அனுமனிடம் சீதை கொடுத்தாள்.

    ஆஞ்சயேர் அதைப் பணிவுடன் பெற்றுக் கொண்டு விடை பெற்றார்.

    • இலங்கைக்குப் போகும் வல்லமை படைத்தவன் அனுமனே என முடிவு செய்தார்கள்.
    • அனுமன் புயல் காற்றைப் போல ஆகாயத்தில் போய்க் கொண்டிருந்தார்.

    ராமனும், லக்குவனும் கிஷ்கிந்தை வருவதை அறிந்த சுக்ரீவனும், அனுமனும் வானரப் படைகளுடன் ராமனைச் சந்தித்தார்கள்.

    தான் வந்த காரணமும் சீதையை ராவணன் கடத்தி சென்றதையும் ராமன் விளக்கினார்.

    இலங்கையில் தான் சீதை இருக்கிறாள் என்பதை அறிந்த அனுமன் யாரை இலங்கைக்கு அனுப்பி சீதையைக் கண்டுபிடிப்பது என யோசனையில் மூழ்கினார்.

    கடலைத் தாண்டி இலங்கைக்குப் போய்த் திரும்பி வரும் திறமை யாருக்கு உண்டு என்பதை வானர வீரர்களும் யோசித்தார்கள்.

    நீலன், அங்கதன், சாம்பவான் போன்றோர் தங்கள் இயலாமையைக் கூறி வருந்தினர்.

    இலங்கைக்குப் போகும் வல்லமை படைத்தவன் அனுமனே என முடிவு செய்தார்கள். இலங்கைக்குப் புறப்பட்டார் அனுமன்.

    அனுமன் புயல் காற்றைப் போல ஆகாயத்தில் போய்க் கொண்டிருந்தார்.

    அவரை எதிர்க்க வந்த சரசை என்னும் அரக்கியை வென்று மேலும் பறந்து சென்றார்.

    எமதர்மன் போல அங்காரதாரை என்ற ராட்சசி குறுக்கே நின்றாள். அவளையும் கொன்றார்.

    மாலை நேரம் அனுமன் இலங்கையில் வந்து இறங்கினார்.

    • தான் தவம் இருந்தபோது கருவுற்றதை அறிந்து அஞ்சனாதேவி வேதனைப்பட்டாள்.
    • அஞ்சனாதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அனுமன் எனப் பெயரிட்டனர்.

    அஞ்சனாதேவி கணவருடன் சென்று பெருமாளை வணங்கினாள். அதன் பிறகு காற்றையே எந்த நேரமும் உணவாகக் கொண்டு இறைவனைக் குறித்து கடும் தவம் இருந்தாள்.

    இதன் காரணமாய் வாயு பகவானின் அருளினால் ஒரு கரு அவள் வயிற்றில் வளர்ந்தது.

    தான் தவம் இருந்தபோது கருவுற்றதை அறிந்து அஞ்சனாதேவி வேதனைப்பட்டாள்.

    அப்போது அசரிரியாய் ஒரு குரல் வந்தது.

    மகேஸ்வரனின் கருணையால், வாயுதேவனின் உருவமே உன் கருவில் இருப்பதால் பிறக்கும் குழந்தைக்கு "வாயு புத்திரன்" எனப் பெயரிடு, அவன் சகல சக்திகளும் பெற்றவனாய் என்றும் சிரஞ்சீவியாய் வாழ்வான் என அந்தக் குரல் கூறியது.

    அதன்படி அஞ்சனாதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அனுமன் எனப் பெயரிட்டனர்.

    அனுமன் வேதங்கள் புராணங்களையெல்லாம் எல்லாம் கற்று மிகுந்த ஆற்றல் கொண்டவராக விளங்கினார்.

    அஞ்சனா தேவி தன் மகனின் திறமையைக் கண்டு வியந்து கிஷ்கிந்தைக்கு அழைத்துச் சென்று சுக்ரீவனிடத்தில் அறிமுகம் செய்து வைத்தாள்.

    சுக்ரிவன் தனது ஆட்சிப் பொறுப்பை அனுமனிடம் ஒப்படைத்தார்.

    • சிவபெருமான் அருளியபடி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அஞ்சனை என்று பெயரிட்டனர்.
    • ஆஞ்சனைக்கும் நீண்ட நாட்களாகக் குழந்தை பிறக்கவில்லை.

    கேசரி என்ற சிவபக்தர் ஒருவர் திரேதா யுகத்தில் வாழ்ந்து வந்தார்.

    அவருக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை.

    அதனால் அவர் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தார்.

    சிவபெருமான் கேசரி முன் காட்சித் தந்தார். அவரிடம் கேசரி தனக்கு பிள்ளை வரம் வேண்டும் என்றார்.

    அதற்கு சிவபெருமான் "பக்தா... உனக்கு மகன் பிறக்க பாக்கியமில்லை. ஒரு மகள் பிறக்கவே பாக்கியம் உள்ளது.

    அந்த மகளுக்கு ஒரு மகன் பிறப்பான். அந்த மகன் வலிமையும், வீரமும் பெற்று மரணம் இல்லாதவனாகச் சிறப்பாக திகழ்வான் எனக் கூறி விட்டு மறைந்து போனார்.

    சிவபெருமான் அருளியபடி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அஞ்சனை என்று பெயரிட்டனர்.

    அஞ்சனைக்கு திருமண வயது வந்ததும் அவளை வானர வீரன் ஒருவனுக்கு கேசரி மணமுடித்து வைத்தார்.

    ஆஞ்சனைக்கும் நீண்ட நாட்களாகக் குழந்தை பிறக்கவில்லை.

    இச்சமயத்தில் தரும தேவதை பெண் வடிவில் தோன்றி திருவேங்கட மலைக்கு கணவனுடன் சென்று பெருமாளை வணங்கி வந்தால் ஆண்மகன் பிறப்பான் எனக் கூறினாள்.

    ×