என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆர்பிஐ"
- ரெப்போ வட்டி 6.5 சதவீதத்தில் மாற்றம் இல்லை என ஆர்.பி.ஐ. கவர்னர் அறிவிப்பு.
- 2023-ல் இருந்து 10-வது முறையாக ரெப்போ வட்டி 6.5 சதவீதத்தில் தொடர்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்தி தாஸ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது "ரெப்போ வட்டி சதவீதத்தில் மாற்றம் இல்லை. 6.5 சதவீதமாக தொடரும். நாணயக் கொள்கை கமிட்டியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்றார்.
2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து 10-வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக தொடர்கிறது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனத்திற்கான கடன் வட்டி வீதத்தில் மாற்றம் இருக்காது.
- இரவு 7 மணியில் இருந்து காலை 7 மணிக்கு முன்பு வரை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை.
- ஆக்சிஸ் வங்கியின் துணை நிறுவனம் தொழில்நுட்ப சேவைகளில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இணங்காத காரணத்திற்காக ஹெச்.டி.எஃப்.சி. வங்கிற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்த ஆர்பிஐ, ஆக்சிஸ் வங்கிற்கு 1.92 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
டெபாசிட் பணத்திற்கான வட்டி விகிதம், கடன் வசூலிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஏஜென்ட், கஸ்டமர் சர்வீஸ் ஆகியவற்றில் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு ஹெச்.டி.எஃப்.சி. வங்கி இணங்காதது தெரியவந்தது. 2002 மார்ச் 31, வங்கியின் நிதி நிலை தொடர்பாக ஆர்பிஐ ஆய்வில் இந்த குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டது.
ஹெச்.டி.எஃப்.சி. இரவு 7 மணியில் இருந்து காலை 7 மணிக்கு முன்பு வரை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்வதை உறுதி செய்வதில் வங்கி தோல்வியடைந்து விட்டதாக ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
ஆக்சிஸ் வங்கி தகுதியற்ற நிறுவனங்களுக்கு கணக்கு தொடங்கியது. தனிப்பட்ட வாடிக்கையாளர் அடையாளக் குறியீட்டிற்குப் பதிலாக பல வாடிக்கையாளர் அடையாளக் குறியீடுகளை வழங்கியது. 1.60 லட்சம் வரையிலான விவசாய கடன்களுக்கு பிணையம் (ஓரிரு வழக்கில்) ஏற்றுக் கொண்டது உள்ளிட்ட காரணத்திற்காக அபராதம் விதித்துள்ளது. மேலும், ஆக்சிஸ் வங்கியின் துணை நிறுவனம் தொழில்நுட்ப சேவைகளில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது. இது வங்கி நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படாத வணிகமாகும்.
இந்த நடவடிக்கையானது சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த ஜூன் மாதம் 5.08 சதவீதமாக இருந்தது.
- 2023 ஜூலை மாதம் 7.44 சதவீதமாக இருந்தது.
நுகர்வோர் விலை குறியீடு (CPI) அடிப்படையிலான சில்லரை பணவீக்கம் கடந்த மாதம் (ஜூன் 2024) 5.08 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இது 7.44 சதவீதமாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூலை 2024) சில்லரை பணவீக்கம் 3.54 சதவீதமாக குறைந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி சில்லரை பணவீக்கம் 4 என இலக்கை கொண்டுள்ள நிலையில் கடந்த ஐந்து வருடங்களில் கடந்த மாதம் 3.54 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக உணவுப் பொருட்கள் குறைந்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
உணவு பொருட்களின் பணவீக்கம் 5.42 சதவீமாக குறைந்துள்ளது. கடந்த மாதம் இது 9.36 ஆக சதவீதமாக இருந்தது என தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
சில்லரை பணவீக்கம் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 சதவீதத்திற்கு கீழ் இருந்தது. அதன்பின் தற்போது ஜூலை மாதம் 4 சதவீதத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
- யூபிஐ மூலம் வரி செலுத்துவதற்கான வரம்பை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தபட்டுள்ளது.
- இதற்கு முன்பு செக் க்ளியரிங் செய்ய இரண்டு வேலை நாட்கள் வரை ஆகும்.
புதுடெல்லி:
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு ஆர்பிஐயின் பணவியல் கொள்கை குறித்து இன்று விவாதத்தித்தது.
இந்த கூட்டத்திற்கு பிறகு குழுவில் எடுக்கப்பட்ட முடிவை ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.
யூபிஐ மூலம் வரி செலுத்துவதற்கான வரம்பை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் இது யூபிஐ மூலம் வரி செலுத்துவதை எளிதாக்கும் என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
மேலும், வங்கி காசோலைகளை சில மணி நேரங்களிலேயே செக் க்ளியரிங் செய்யும் திட்டம் கொண்டுவரப்படவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தற்போது, செக் ட்ரங்கேஷன் சிஸ்டம் (CTS) மூலம் செக் க்ளியரிங் செய்ய இரண்டு வேலை நாட்கள் வரை ஆகும் நிலையில், இந்த புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
- ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று அறிவிப்பு.
- 9வது முறைாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படவில்லை.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான இரண்டு நாள் நாணயக் கொள்கை குழு கூட்டம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கியது. இன்று இந்த கூட்டம் முடவடியை உள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டது. இதில் பலரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5% ஆக தொடரும். 9 ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. வட்டி விகிதம் குறைக்காமல் இருப்பதற்கு நாணய கொள்கை குழுவில் நான்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இரண்டு உறுப்பினர்கள் இதற்கு எதிராக வாக்களித்தனர்.
பெரும்பான்மை கருதி, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக வீடு, வாகன கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது. வங்கிகளின் குறுகிய கால வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. இதனால் கடன் வாங்கியவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கடந்த 2023 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் இன்றி 6.5 சதவீதமாக நீடிக்கிறது. அமெரிக்க பொருளாதாக சூழல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- மாநிலத்தின் மோசமான நிதியை நிலையை சுட்டிக்காட்டி மத்திய பிரதேச மாநிலத்திற்கு ஆர்பிஐ கடன் வழங்க மறுத்துவிட்டது.
- மோகன் யாதவ் தலைமையிலான 160 நாட்கள் ஆட்சியின் பொருளாதார நிலை குறித்து வெள்ளை அறிக்க வெளியிட நாங்கள் விரும்புகிறோம்.
மத்திய பிரதேச மாநிலத்தின் பொருளாதாரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பா.ஜனதா முதல்வர் மோகன் யாதவிடம் அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "மாநிலத்தின் மோசமான நிதியை நிலையை சுட்டிக்காட்டி மத்திய பிரதேச மாநிலத்திற்கு ஆர்பிஐ கடன் வழங்க மறுத்துவிட்டது. மோகன் யாதவ் தலைமையிலான 160 நாட்கள் ஆட்சியின் பொருளாதார நிலை குறித்து வெள்ளை அறிக்க வெளியிட நாங்கள் விரும்புகிறோம். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள்.
பெண்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை, ரூ.450-க்கு சமையல் எரிவாயு போன்ற வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசு ஆடம்பரமாக பணத்தைச் செலவு செய்கிறது. மாநிலத்தின் கஜானா காலியாக இருந்த நிலையில், பாஜக அரசு விமானம் வாங்க திட்டமிட்டு, அமைச்சர்களின் வீடுகளை அலங்கரிப்பதற்கும், அவர்களுக்கு விலை உயர்ந்த வாகனங்கள் வாங்குவதற்கும் பணம் செலவழிக்கிறது" என்றார்.
- உலகளாவிய கடன்-ஜிடிபி விகிதம் அதிகமாக உள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இது விளைவை ஏற்படுத்தலாம்.
- 2025 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
1. ரிசர்வ் வங்கியின் பயணம் இந்தியப் பொருளாதாரத்தின் பரிணாம வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையது.
2. எங்களின் பல பொறுப்புகளை நிறைவேற்றும்போது கற்றுக் கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், புதுமைப்படுத்தவும் தொடர்ந்து பாடுபடுகிறோம்.
3. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு ரெப்போ வட்டியை 6.5 சதவீதமாக நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
4. வலுவான வளர்ச்சி வாய்ப்புகள் கொள்கை பணவீக்கத்தை 4 சதவீத இலக்கை கொண்டு வருவதில் கவனம் செலுத்துவதற்கான இடத்தை வழங்குகிறது.
5. உணவுப் பணவீக்க அழுத்தங்கள் பிப்ரவரியில் அதிகரித்தன; பணவீக்கத்தின் தலைகீழ் ஆபத்தில் எம்.பி.சி. விழிப்புடன் உள்ளது.
6. உலகளாவிய கடன்-ஜிடிபி விகிதம் அதிகமாக உள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இது விளைவை ஏற்படுத்தலாம்.
7. கிராமப்புற தேவை மற்றும் நுகர்வு2025 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8. 2025 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது.
9. உலகளாவிய வளர்ச்சி மீள்தன்மையுடன் உள்ளது. சமீபத்திய கச்சா எண்ணெய் விலை உயர்வை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டி நிலை உள்ளது.
10. தொடரும் உலகளாவிய அரசியல் பதற்றங்கள் பொருட்களின் விலைகளில் தலைகீழான அபாயங்களை ஏற்படுத்துகின்றன.
11. அறையில் இருந்த யானை (பணவீக்கம்) நடைபயிற்சிக்கு வெளியே சென்றதுபோல் தெரிகிறது. அது மீண்டும் காட்டில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
12. விலை ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதே எங்கள் முயற்சி
13. வங்கிகள், என்.பி.எஃப்.சி-க்கள், பிற நிதி நிறுவனங்கள் தொடர்ந்து நிர்வாகத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்
14. ரிசர்வ் வங்கி அரசுப் பத்திரச் சந்தையில் சில்லறை வணிக பங்களிப்பை எளிதாக்க மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது.
15. இந்தியாவின் அந்நிய செலாவணி இது வரை இல்லாத அளவிற்கு மார்ச் 29-ல் உயர்வு.
- தடை உடனடியாக அமலுக்கு வருவதாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்தது
- தங்க நகைகளின் தூய்மையை பரிசோதிப்பதில் தவறுகள் உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்தது
1995ல் நிர்மல் ஜெயின் (Nirmal Jain) என்பவர் தொடங்கிய நிதி வர்த்தக சேவை நிறுவனம்,"ஐஐஎஃப்எல்" (India Infoline Finance Limited).
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐஐஎஃப்எல் (IIFL), இந்தியாவின் பல முக்கிய நகரங்கள் மட்டுமின்றி பல உலக நாடுகளிலும் நிதி வர்த்தக சேவை ஆற்றி வருகிறது.
பல்வேறு நிதி சேவைகளில் ஈடுபட்டு வரும் ஐஐஎஃப்எல், தங்க நகைக்கடன் வழங்குவதிலும் முன்னணியில் உள்ள வங்கி-சாரா நிதி நிறுவனமாக (NBFC) உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் வங்கி சேவைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களை கண்காணிக்கும் மத்திய ரிசர்வ் வங்கி (RBI), ஐஐஎஃப்எல் தங்க நகைக்கடன் வழங்குவதை தடை செய்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
இதுவரை வினியோகிக்கப்பட்ட தங்க நகைக்கடன் தொடர்பான வசூல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தொடர தடையேதுமில்லை.
ஆர் பி ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
தங்க நகைக்கடன் வழங்குவதில் பல முறைகேடுகள் இருந்தது.
தங்க ஆபரணங்களின் தூய்மையை (purity) பரிசோதிப்பதில் கடன் வழங்கும் போது ஒரு நடைமுறையையும், தவணைகளை கட்ட தவறியவர்களின் நகைகளை ஏலம் விடும் போது வேறொரு நடைமுறையையும் கடைபிடிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வங்கி-சாரா நிதி நிறுவனங்களுக்கு உள்ள கடன் வழங்கும் எல்லையை கடந்து கடன் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
நகைகளை ஏலம் விடுவதில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படவில்லை.
வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பிடித்தம் செய்யப்படும் சேவைக்கட்டணங்களில் சீரான கட்டண அமைப்போ வெளிப்படைத்தன்மையோ இல்லை.
நிறுவனத்தின் கணக்குகளை ஆர்பிஐ-யின் சிறப்பு தணிக்கை குழு தணிக்கை செய்து முடித்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"ஆர்பிஐ விதித்துள்ள சட்டதிட்டங்களின்படி தங்க நகைக்கடன் வழங்க அனைத்து நிர்வாக மற்றும் செயலாக்க நடைமுறைகளும் மாற்றி அமைக்கப்படுகிறது" என நிறுவனர் நிர்மல் ஜெயின் தெரிவித்தார்.
- 2024 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
- ரெப்போ வட்டி தொடர்ந்து 6.5 சதவீதமாக இருக்கும். எந்த மாற்றமும் இல்லை.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து 6.5 சதவீதமாக தொடர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உலகக் பொருளாதாரம் தொடர்ந்து உடையக் கூடியதாக உள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அஸ்திவாரம் தொடர்ந்து வலுவாகவே உள்ளது.
உள்நாட்டு உற்பத்தி முந்தைய 6.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்கி- கார்பரேட் ஆகியவற்றின் ஆரோக்கியமான இரட்டை சமநிலைக்கு தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்.
உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன.
முக்கிய பணவீக்கத்தில் பரந்த அடிப்படையிலான தளர்வு உணவு பணவீக்கத்திற்கு ஆபத்தானது. 2024 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
- பஜாஜ் ஃபின்சர்வ் இரண்டு டிஜிட்டல் கடன் திட்டங்களை செயல்படுத்தி வந்தது
- கீ ஃபேக்ட்ஸ் ஸ்டேட்மென்ட் விவரங்கள் முறையாக இல்லை என ஆர்பிஐ தெரிவித்தது
இந்தியாவின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்களில் (NBFC) ஒன்று, பஜாஜ் ஃபின்சர்வ் (Bajaj Finserv).
தனி நபர் கடன் மற்றும் வர்த்தக கடன் வழங்குவதில் முன்னணியில் உள்ள நிறுவனமான பஜாஜ் ஃபின்சர்வ், நிதி வர்த்தகத்தில் புதுமையாக டிஜிட்டல் முறையில் கடன் வழங்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி (RBI), இந்நிறுவனம் "ஈகாம்" (eCOM) மற்றும் "இன்ஸ்டா ஈஎம்ஐ கார்டு" (Insta EMI Card) எனும் பெயரில் வழங்கி வந்த இரண்டு டிஜிட்டல் கடனுதவி சேவைகளை தொடர தடை விதித்துள்ளது.
ஒவ்வொரு கடன் வழங்கும் நிறுவனமும் வெவ்வேறு கட்டண விகிதம் வசூலிக்கின்றன; கடனை திருப்பி செலுத்துவதிலும் வெவ்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளன. எனவே கடன் பெறுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்களை எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு நிதி நிறுவனமும் வழங்க வேண்டும்.
இந்த தகவல்கள் அடங்கிய விவர பட்டியல், "முக்கிய தகவல்களுக்கான குறிப்பு" என்றும் "கீ ஃபேக்ட்ஸ் ஸ்டேட்மென்ட்" (Key Facts Statement) என்றும் அழைக்கப்படும். இப்பட்டியல் மூலம் நிதி நிறுவனத்தின் வட்டி விகிதம், இதர கட்டணங்கள், கால தாமதத்திற்கான வட்டி விகிதம், கடனை வசூல் செய்யும் முறைகள், தவணைக்காலம், காப்பீட்டு தொகை விவரங்கள், முன்னதாகவே அசலை செலுத்தினால் அதற்கான அபராதம் உள்ளிட்ட கடன் பெறுவோர் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்களையும் வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடியும்.
பஜாஜ் ஃபின்சர்வ், இந்திய ரிசர்வ் வங்கியின் சில விதிமுறைகளை மீறியதாகவும், "கீ ஃபேக்ட்ஸ் ஸ்டேட்மென்ட்" விவர குறிப்பில் கடன் பெறுவோர் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்களை முறையானபடி வழங்கவில்லை என்றும், இதன் காரணமாக அந்நிறுவனத்திற்கு டிஜிட்டல் முறையில் கடன் வழங்க தடை விதிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
இந்த குறைபாடுகளை பஜாஜ் ஃபின்சர்வ் சரி செய்த பின் அனுமதி வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
- சொத்து தொடா்பான அடமானப் பத்திரம் உள்ளிட்டவை இருந்தால் அவற்றை ரத்து செய்வது உள்ளிட்ட அந்தக் கடன் தொடா்பான அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட வேண்டும்.
- கடன் பெற்றவா் இறந்துவிட்டால், அவரது சட்டப்படியான வாரிசுகளிடம் பத்திரங்களை ஒப்படைக்க வேண்டும்.
மும்பை:
வங்கிகளில் கடன் வாங்கி வீடு, நிலம், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துகளை வாங்குவோரிடம் சொத்துப் பத்திரத்தை வங்கிகள் அல்லது சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் வைத்துக் கொள்வது வழக்கமாகும். கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய பிறகு அந்த சொத்துப் பத்திரத்தை சம்பந்தப்பட்ட நபரிடம் திருப்பி அளிப்பது, கடனில் இருந்து மீட்டுவிட்டதற்கான தடையில்லாச் சான்று பெறுவது, அடமானப் பத்திரத்தை ரத்து செய்வது ஆகியவற்றுக்கு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அதிக காலம் எடுத்துக்கொள்வதாக புகாா்கள் தொடா்கின்றன.
இந்நிலையில், இது தொடா்பாக ஆர்.பி.ஐ. வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற வாடிக்கையாளா் ஒருவா் கடனை முழுமையாக அடைத்த 30 நாட்களுக்குள் அவரிடம் இருந்து அடமானமாகப் பெற்ற சொத்துப் பத்திரங்களை திருப்பி அளித்துவிட வேண்டும். மேலும், அந்த சொத்து தொடா்பான அடமானப் பத்திரம் உள்ளிட்டவை இருந்தால் அவற்றை ரத்து செய்வது உள்ளிட்ட அந்தக் கடன் தொடா்பான அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட வேண்டும்.
இதைச் செய்யாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் தினசரி ரூ.5,000 தாமதக் கட்டணமாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு அளிக்க வேண்டும்.
மேலும், வாடிக்கையாளா் கடன் பெற்ற குறிப்பிட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் கிளையில் மட்டும் ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறாமல், அவா் விரும்பும் கிளை மூலம் ஆவணங்களைத் திருப்பி அளிக்கவும் வசதி செய்து தர வேண்டும். இது தொடா்பான விவரங்களைக் கடன் பெறும்போது அளிக்கும் கடிதத்திலேயே வங்கிகள் தெளிவாகக் கூறிவிட வேண்டும்.
கடன் பெற்றவா் இறந்துவிட்டால், அவரது சட்டப்படியான வாரிசுகளிடம் பத்திரங்களை ஒப்படைக்க வேண்டும். இது தொடா்பான நடைமுறைகளையும் முன்னதாகவே வாடிக்கையாளருக்கு கூறிவிட வேண்டும்.
எதிா்பாராதவிதமாக சொத்து ஆவணங்கள் சேதமடைதல், தொலைந்து போவது போன்ற நிலை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வங்கிகள், அந்த வாடிக்கையாளா் மாற்று ஆவணம் பெறுவதற்கு உரிய உதவிகளை அளிக்க வேண்டும். இதற்கு 60 நாள்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்