என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "படுக்கை வசதி பெட்டிகள்"
- ெரயில்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி லக்கேஜ் வைக்குமிடத்தில் அமர்ந்து ரெயில் பெட்டியின் தரையில் அமர்ந்து பலர் பயணிக்கின்றனர்.
- ஸ்லீப்பர் பெட்டிகளை கண்டறிந்து அறிக்கை தயாரிக்க மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:
ெரயில்களில் முன்பதிவு செய்த படுக்கை வசதி ஏ.சி. பெட்டிகளில் பயணிப்பவரை விட முன்பதிவு செய்யாத பொது பெட்டிகளில் பயணிப்பவரே எப்போதும் அதிகம். பொதுப்பெட்டி குறைவாக உள்ள ெரயில்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி லக்கேஜ் வைக்குமிடத்தில் அமர்ந்து ரெயில் பெட்டியின் தரையில் அமர்ந்து பலர் பயணிக்கின்றனர்.
பகல் நேரங்களில் தான் நிலை இப்படி என்றால் இரவில் ெரயிலில் பயணிப்போர் இருமடங்கு அதிகம் என்பதால் நிலை இன்னமும் மோசமாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் முயற்சிகளில் ஒன்றை ெரயில்வே நிர்வாகம் ஆலோசித்துள்ளது.
அதன்படி பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள படுக்கை வசதி (ஸ்லீப்பர்) பெட்டிகள் முன்பதிவு செய்யாத பொது பெட்டிகளாக மாற்றப்பட உள்ளது. பகல் நேர ெரயில்களில் அதிக அளவில் படுக்கை வசதி பெட்டி காலியாக செல்வதால் முதல்கட்டமாக பகல் நேர ெரயில்களில் படுக்கை வசதி பெட்டி முன்பதிவு கலெக் ஷன் குறித்த ஆராயப்பட உள்ளது.
இது குறித்து ெரயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தொடக்கத்தில் மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் பல ெரயில்களில் பொது பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தற்போது பொது பெட்டிகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
சூழலை கருத்தில் கொண்டு ஏ.சி. மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளை பொது பெட்டிகளாக மாற்ற ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இதற்காக பகல் நேர ெரயில்களில் பயணிகள் குறைவாக உள்ள ஸ்லீப்பர் பெட்டிகளை கண்டறிந்து அறிக்கை தயாரிக்க மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்டல வாரியாக ெரயில்கள் எண்ணிக்கை தெரிந்த பின் பொது பெட்டியாக மாற்றப்படுவது குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.