search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படகுதளம்"

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடந்த கூட்டத்தில் முடிவு
    • கடல்சார் வாரியம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள படகு தளத்தில் ஒரே ஒரு படகு மட்டுமே நிறுத்துவதற்கான வசதிகள் உள்ளது. இதனால் படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லும் மற்ற படகுகள் ஏற்கனவே சென்ற படகு கரை திரும்பும் வரை கடலில் சுற்றுலா பயணிகளுடன் காத்து நிற்கவேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.

    இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் கூடுதல் படகு கட்டும் தளம் அமைக்க அரசுக்கு தமிழ்நாடு கடல்சார் வாரியம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து விவேகானந்தர் மண்ட பத்தில் கூடுதலாக படகுகள் நிறுத்துவதற்கு வசதியாக சாகர்மாலா திட்டத்தின் கீழ் மத்திய- மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.20 கோடி செலவில் 100 மீட்டர் நீளத்தில் புதிய படகு தளம் கட்டும் பணி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதி தொடங்கியது.

    படகு தளம் கட்டுவத ற்காக மொத்தம் 1500 சிமெண்ட் பிளாக்குகள் தயார் செய்யப்பட்டன. இதில் 1200 சிமெண்ட் பிளாக்குகள் மட்டுமே சின்னமுட்டம் துறைமுக த்தில் இருந்து கடல் வழியாக மிதவை கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு ராட்சத கிரேன் மூலம் கடலில் இறக்கி நிரப்பும் பணி நடந்த வந்தது.

    இந்த நிலையில் படகு கட்டும் தளம் அமைக்க ப்படுவதால் வாவத்துறை பகுதி மீனவர்கள் தங்க ளுக்கு கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்ய முடியாத ஆபத்தான நிலை இருந்து வருவதாகவும் இந்தப் படகு கட்டும் தளம் அமைக்கப்படுவதன் மூலம் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் கூறி கடும் எதிர்ப்பு தெரிவி த்தனர்.

    இது சம்பந்தமாக வாவ த்துறை பகுதி மீனவர்கள் குமரி மாவட்ட கலெக்ட ரையும் நேரில் சந்தித்து விவேகானந்தர் மண்ட பத்தில் கூடுதல் படகுதளம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரி வித்து மனு கொடுத்தனர். இதற்கிடையில் வாவத்துறை பகுதி மீனவர்கள் கன்னியா குமரி சட்டமன்ற உறுப்பினர். தளவாய் சுந்தரத்தையும் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்த னர்.

    அதன் அடிப்படையில் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலகத்தில் தளவாய்சு ந்தரம் எம்.எல்.ஏ. முன்னி லையில் பொதுப் பணி த்துறை அதிகாரிகள் மற்றும் வாவத்துறை பகுதி மீன வர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நேற்று மாலை நடந்தது.

    இந்த பேச்சுவார்த்தையில் குமரி மாவட்ட பொதுப்ப ணித் துறை கட்டிட பிரிவு செயற்பொறியாளர் வெள்ளைச்சாமி, உதவி செயற்பொறியாளர் முருகே சன், உதவி பொறியாளர் மாரித்துரை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் பழனி, தமிழ்நாடு கடல் சார் வாரிய துறைமுக பாதுகாப்பாளர் தவமணி மற்றும் வாவத்துறைபகுதி மீனவர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது இது சம்பந்தமாக தமிழ்நாடு கடல்சார் வாரிய பொறியாளர்கள் மற்றும் ஐ.ஐ.டி. நிறுவன பொறியா ளர்களை வரவழைத்து விவேகானந்தர் மண்டப த்தில் மீனவர்களின் மீன்பி டித் தொழில் பாதிக்காத வண்ணம் படகு தளம் அமைப்பது குறித்து ஆய்வு செய்வது என்றும் அதற்காக 20 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்றும் அதிகா ரிகள் உறுதி அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம்நடந்த இந்த இந்த பேச்சுவார்த்தை முடி வுக்கு வந்தது. அதன் பிறகு மீனவர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்து அங்குஇருந்து கலைந்து சென்றனர்.

    ×