search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு எதிர்ப்பு"

    • அப்பிபட்டியில் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி குறிப்பிட்ட சமூகத்தினர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
    • ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சின்னமனூர்-அப்பிபட்டி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே அழகாபுரி என்ற அப்பிபட்டியில் பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை யொட்டி குறிப்பிட்ட சமூகத்தினர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரி வித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த விநாயகர் சிலை ஊர்வல த்தினர் சின்னமனூர் - அப்பிபட்டி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் கடந்த 40 ஆண்டுகளாக விநாயகர் சிலையை முக்கிய தெருக்கள் வழியாக கொண்டு சென்று வருகி றோம்.

    ஆனால் கடந்த ஆண்டு ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஊர்வலத்து க்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஆண்டும் மீண்டும் பிரச்சினை ஏற்படுத்து கின்றனர். ஆனால் நாங்கள் வழக்கமாக செல்லும் தெருக்கள் வழியாகவே செல்வோம் என்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே இரு தரப்பின ரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ×