search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் விபத்துக்களை"

    • மின்வாரிய அதிகாரி தகவல்
    • மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலர்களை அணுகவும்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மின் பகிர்மான வட்ட மேற் பார்வை பொறியாளர் பத்மகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குமரியில் பருவமழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் அவ்வபோது பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    காற்று மற்றும் மழைக் காலங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பி கள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் இழுவை கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ, அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அதுகுறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு மின்வாரிய அலுவலர்கள் வரும் வரை வேறு யாரேனும் அந்த மின் கம்பிகளை தொடாமல் பார்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. வீடுகள், மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளில் ஏற்படும் மின் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயற்சிக்கக் கூடாது.

    இடி, மின்னலின்போது, டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, கைபேசி மற்றும் தொலைபேசியை பயன் படுத்தக்கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக்கூடாது. மின்மாற்றிகள், மின்ப கிர்வு பெட்டிகள் மற்றும் மின்கம்பங்கள் அருகே தண்ணீர் தேங்கியிருக் கும்போது அதன் அருகே செல்லக்கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    வீடுகளில் பழுதடைந்த நிலையில் உள்ள சுவிட்ச் மற்றும் பல்புகளை உடனடி யாக மாற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதிய மற்றும் ஏற்கனவே உள்ள மின் இணைப்புகளில் இ.எல்.சி.பி./ஆர்.சி.டி. பொருத்தி மின்விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது. மின் நுகர்வோர்கள் பழுதடைந்த நிலையில் காணப்படும் சர்வீஸ் வயர்களை மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழையின்போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு இருக்குமாயின் அந்த பகுதியில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

    உயர் மற்றும் தாழ்வழுத்த மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலர்களை அணுகவும். பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையதால் மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும் பொழுது மரக்கிளைகள் மின்கம்பியில் பட்டு மரம் வெட்டும் நபருக்கு மின் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மின் கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்துவதோ, மின் கம்பங்கள், ஸ்டே வயர்கள் மற்றும் சர்வீஸ் பைப்களில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது.

    வீடுகள், மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளில் ஏற்படும் மின் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரி செய்ய முயற்சிக்கக்கூடாது. மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து மின்சாரம் மிகவும் தேவையானது. அதனை மிகவும் பாதுகாப்பான முறையில் உப யோகித்து மின் விபத்துகளை தவிர்க்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    ×