search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "53 அடியை எட்டும் மஞ்சளாறு அணை"

    • 53 அடியை எட்டுவதால் 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும் என அதிகாரிகள் என தெரிவித்தனர்.
    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் மஞ்சளாறு அணை அமைந்துள்ளது. இதன்மூலம் தேவதானப்பட்டி, வத்தலக்குண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

    கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 51 அடியை எட்டியதும் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வத்தலக்குண்டு குன்னுவாரன்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மஞ்சளாறு கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 52.20 அடியாக உள்ளது. அணைக்கு 88 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. விரைவில் 53 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும் என அதிகாரிகள் என தெரிவித்தனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது. 719 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 48.52 அடியாக உள்ளது. 333 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 85.60 அடியாக உள்ளது. 22 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 5.4, தேக்கடி 2.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    ×