என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிச்சன் டிப்ஸ்"
- தேங்காய்ப்பால் கலந்து இனிப்பு அப்பம் செய்தால் ஸ்பான்ஞ்ச் போல இருக்கும்.
- பீங்கான் ஜாடியில் தயிர் உறை ஊற்றினால் சீக்கிரம் புளிக்காமல் இருக்கும்.
* அடுப்பில் சாம்பார், ரசம் பொங்கி வழியாமல் இருக்க, பாதி கொதி வரும்போதே இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய் விட்டால் பொங்கி வழியாது.
* கிழங்குகளை வேகவைக்க, அரிசி கழுவிய நீரை பயன்படுத்தினால் சீக்கிரம் வெந்துவிடும்.
* ஆம்லெட் செய்யும்போது ஒரு ஸ்பூன் மைதா மாவு கலந்து செய்தால் பெரியதாகவும், உப்பியும் வரும்.
* கத்தரிக்காய் வேக வைக்கும்போது, அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் கத்தரிக்காய் நிறம் மாறாமல் இருக்கும்.
* முருங்கை இலைகளை உருவிய பிறகு அதன் காம்புகளை நறுக்கிப்போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால், உடல், கை, கால் அசதி நீங்கும்.
* துவரம் பருப்பு துவையல் செய்யும் போது, சிறிது கொள்ளும் சேர்த்து, வறுத்து அரைத்தால் மணமும், சுவையும் கூடுதலாக இருக்கும்.
* பலகாரம் சுட்ட எண்ணெயில் வாழைக்காய் வறுவல் செய்தால் டேஸ்ட் பிரமாதமாக இருக்கும்.
* மோரில் ஊறவைத்த வாழைப்பூவை சிறிது நெய்விட்டு வதக்கி துவையல் செய்தால் வித்தியாசமான சுவையில் சூப்பராக இருக்கும்.
* தேங்காய்ப்பால் கலந்து இனிப்பு அப்பம் செய்தால் ஸ்பான்ஞ்ச் போல மிருதுவாக இருக்கும்.
* ரசம் கொதிக்கும்போது 4-5 புதினா இலைகளை போட்டு கொதிக்கவிட்டால், வாசனை தூக்கலாக இருக்கும்.
* பீங்கான் ஜாடியில் தயிர் உறை ஊற்றினால் சீக்கிரம் புளிக்காமல் இருக்கும்.
* பிளாஸ்க் காலியாக இருக்கும்போது ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு வைத்தால் வாடை வராமல் இருக்கும்.
* குழம்பு, சாம்பாரை தட்டு போட்டு மூடி வைத்தால் சூட்டில் வியர்த்துக் கொட்டி, நீர்த்துவிடும். எனவே, ஒரு கரண்டியை போட்டு மூடவும்.
* கொத்தமல்லி சட்னி அரைக்கும் போது புளிக்கு பதிலாக எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்தால், சட்னி கறுக்காது. பசுமையாகவே இருக்கும்.
* மோர்க்குழம்புக்கு மசாலா அரைக்கும் போது சிறிதளவு இஞ்சி சேர்த்து அரைக்கவும். குழம்பு ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
* கீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது. ருசியாகவும் இருக்கும்.
* பருப்பு வேகவைக்கும்போது ஒரு காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போடவும். சீக்கிரம் வெந்துவிடும்.
* தோல் சீவிய இஞ்சித்துண்டை போட்டு உறை ஊற்றி வைக்கும்போது தயிர் ரொம்பவும் புளிக்காமல் அளவான
பதத்தில் இருக்கும்.
* காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடுதண்ணீரில் டிகாஷன் போடும் பாத்திரத்தை (ஃபில்ட்டரை) சிறிது நேரம் வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காபித்தூள் இறங்கிவிடும்.
* புளி இல்லாமல் வெறும் தக்காளி மட்டும் வைத்து ரசம் வைப்பவர்கள், ரசத்தை இறக்கியதும் அரைமூடி எலுமிச்சைச்சாறு சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.
* கிழங்கு வகைகளை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. காற்றாட திறந்து வைத்தால்தான் கெடாமல், காயாமலும் இருக்கும்.
* எல்லா அசைவ சமையலுக்கும் குருமாக்களுக்கும் இஞ்சி பூண்டு விழுது அவசியம். இஞ்சி அரை கிலோ, பூண்டு 300 கிராம் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளலாம். அரைத்ததும் அதனுடன் சிறிது உப்புத்தூள் கலந்து வைக்க வேண்டும். இதை இரண்டாகப் பிரித்து, ஒரு பாதியை பிரிசரிலும் வைக்கலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்