search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெசெர்ட்"

    • தினை கீர் ட்ரை பண்ணி பாருங்க.
    • வித்தியாசமான முறையில் தினை கீர் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

    ஏதாவது வித்தியாசமா சமைக்கனுமா? அப்போ இந்த தினை கீர் ட்ரை பண்ணி பாருங்க. சுவையான வித்தியாசமான முறையில் தினை கீர் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    தினை அரிசி- அரை கப்

    சர்க்கரை- 100 கிராம்

    கோவா- 50 கிராம் (சர்க்கரை இல்லாதது)

    நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் தலா- ஒரு டீஸ்பூன்

    கசகசா- 10 கிராம்

    ஏலக்காய்- 2

    பால்- டீஸ்பூன்

    குங்குமப்பூ- ஒரு சிட்டிகை

    செய்முறை:

    தினை அரிசியை தண்ணீரில் களைந்து சுத்தம் செய்து குக்கரில் குழைய வேகவைக்கவும். கசகசாவுடன் ஏலக்காய், பால் சேர்த்து விழுதாக அரைக்கவும். இனிப்பு இல்லாத கோவாவை உதிர்த்து போட்டு நன்றாக பிசைந்து சேர்க்க வேண்டும். அதனுடன் வேகவைத்துள்ள தினையையும், அரைத்த விழுது, சர்க்கரை மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்க்கவும். இறுதியாக குங்குமப்பூ (தேவைப்பட்டால்) தூவி பரிமாறினால் சுவையான தினை கீர் தயார். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறலாம்.

    ×