search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சருமத்தை பாதுகாப்பது எப்படி"

    • இளம்வயதிலேயே சருமம் சார்ந்த பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
    • சூரியனின் புறஊதா கதிர்கள் தோல் செல்களை அழிக்கும் வல்லமை கொண்டது.

    இளம்வயதில் ஆண், பெண் என இருவரும் இளம்வயதிலேயே சருமம் சார்ந்த பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். தோல் சுருக்கம், தோல் நிறம் மாறுதல், தோலில் புள்ளிகள் ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு சரும பிரச்சனைகள் தொடரும் பட்சத்தில் ஒவ்வொருவரும் இளம்வயதிலேயே வயதானவர்கள் போன்று மாறுவார்கள். இந்த பிரச்சனைகளில் இருந்து நாம் சில முக்கிய டிப்ஸ்களை பின்பற்றினாலே போதும். எளிதாக எப்போதும் சரும பிரச்சனைகளை சந்திக்காமல் இளமையாக ஜொலி ஜொலிக்காலம். இதற்கு நாம் கடைப்பிடிக்க வேண்டிய 8 முக்கிய டிப்ஸ்கள்:

    முதல் டிப்ஸ்

    நாள்தோறும் நாம் வெளியில் செல்லும்போது சூரியகதிர்கள் உடல் மேல் விழுவதை நம்மால் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. சூரியனின் புறஊதா கதிர்கள் தோல் செல்களை அழிக்கும் வல்லமை கொண்டது. இதனால் தோலில் சுருக்கங்கள் அல்லது நிறமாற்றங்கள் ஏற்பட்டு புள்ளிகள் உருவாக வாய்ப்புள்ளது. இதில் இருந்து நாம் பாதுகாத்து கொள்ள சன்ஸ்க்ரீனை பயன்படுத்தலாம். ஆனாலும் சன்ஸ்க்ரீனை தேர்வு செய்வதில் அதிக கவனம் கொள்ள வேண்டும். அதாவது சன்ஸ்க்ரீனை பொறுத்தமட்டில் எஸ்பிஎப் 30 அல்லது அதற்கு மேல் உள்ள அளவை பயன்படுத்துவது சிறந்ததாகும்.

    2-வது டிப்ஸ்

    புகைப்பிடித்தல் மற்றும் புகைப்பிடிப்பவரின் அருகே இருத்தல் உள்ளிட்டவையும் சருமத்தை பாதிக்கும். புகைப்பிடிப்பது மற்றும் புகைப்பவர் வெளிவிடும் காற்று உள்ளிட்டவை சருமத்தை பாதிக்கும். இது தோலின் ரத்த ஓட்டத்தை குறைக்கும். இதனால் வாய் மற்றும் கண்களை சுற்றி சுருக்கம், கோடுகள் உருவாகலாம். இதனால் புகைப்படிப்பதை கைவிட்டு புகைப்பிடிப்பவரின் அருகே செல்வதையும் தவிர்ப்பதன் மூலம் சருமத்தை பாதுகாக்கலாம்.

    3-வது டிப்ஸ்

    ஆரோக்கியமான சருமத்துக்கு தண்ணீர் என்பது மிகவும் முக்கியமாகும். இதனால் ஒவ்வொருவரும் அதிகளவில் தண்ணீர் குடிப்பது அவசியமாகும். தண்ணீர் மூலம் சருமம் ஹைட்ரேட் அடையும். இதன்மூலம் சருமம் பளபளப்பாக இருக்கும். இதன்மூலம் அனைவருக்கும் மிகவும் இளமையாக காட்சியளிக்கலாம். இதற்கு ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியமாகும். இவ்வாறு செய்வதன் மூலம் சருமத்தை அழகாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்கலாம்.

    4-வது டிப்ஸ்

    ஆரோக்கியமான உணவுக்கும் சருமத்தின் பாதுகாப்புக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொழுப்புகள் நிறைந்த சமச்சீர் உணவை தினமும் எடுத்து கொள்ள வேண்டும். இதன்மூலம் சருமத்துக்கு தேவையான ஊட்டச்சத்துகளை ஒருசேர பெற முடியும். குறிப்பாக கீரை வகைகள், நட்ஸ், மீன் மற்றும் அவகோடா, பெர்ரி பழங்களை கட்டாயமாக உண்ண வேண்டும்.

    5-வது டிப்ஸ்

    மேலும் பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்துக்கு போதுமான அளவு தூக்கம் அவசியமாகும். ஏனென்றால் நாம் தூங்கும்போது தான் சருமத்தில் உள்ள தோல் செல்கள் தங்களை புதுப்பித்து கொள்கின்றன. இது சருமம் மீதான சுருக்கம், நிறமாற்றத்தை தடுக்க உதவும். இதனால் ஒவ்வொருவரும் இரவில் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

    6-வது டிப்ஸ்

    மேலும் ஆன்டிஏஜிங் புராடக்ட்டுகளை பயன்படுத்தலாம். குறிப்பாக ரெட்டினோல், வைட்டமின் சி மற்றும் ஹைலூரோனிக் அமிலம் நிறைந்த ஆன்டிஏஜிங் தயாரிப்புகளை பயன்படுத்தலாம். இந்த பொருட்கள் தோல் சுருக்கம், தோலில் ஏற்படும் நிறமாற்றம் உள்ளிட்டவற்றை தடுக்கும். இருப்பினும் இந்த பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் உடனடியாக ரிசல்ட் என்பதை எதிர்பார்க்க முடியாது. மாறாக படிப்படியாக சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட வாய்ப்பு ஏற்படும்.

    7-வது டிப்ஸ்

    சருமத்தை பாதுகாக்க இன்னொரு வழிமுறை என்றால் அது உடற்பயிற்சி செய்வதாகும். தினமும் உடற்பயிற்சி செய்வது என்பது உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இது தோல் செல்களுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்க உதவுகிறது. இதனால் தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். இதன்மூலம் சருமத்தை அழகாகவும் சிறப்பாக பராமரிக்க முடியும்.

    8-வது டிப்ஸ்

    தற்போதைய சூழலில் பலரும் மனஅழுத்த பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். முடிந்தவரை மனஅழுத்தத்தை தவிர்க்க அனைவரும் முயற்சிக்க வேண்டும். மனஅழுத்தம் நிம்மதியை இழக்க செய்வதோடு உடல்நல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். குறிப்பாக சருமத்தையும் பாதிக்கிறது. அதாவது மனஅழுத்தத்தின்போது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் சருமத்தின் செல்களை சிதைக்கின்றன. இது தோலில் பாதிப்பை ஏற்படுத்தி வயதானவர்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தலாம். இதனால் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் தியானம், போதிய அளவிலான தூக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

    ×