search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாபம் பெறுவது எப்படி"

    • பெட்டை ஆடுகளின் உற்பத்தி திறன் பெரிதும் பாதிக்கப்படும்.
    • பொலி கிடாய்களை தேர்வு செய்து இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

    ஆடுகளை பாரம்பரியமாக வளர்த்து வருபவர்கள் ஒரே கிடாயை பல ஆண்டுகள் இனவிருத்திக்காக பயன்படுத்துகின்றனர்.

    இனவிருத்தி மேலாண்மை

    இவ்வாறு பயன்படுத்தும் போது உள் ரத்த சொந்தங்கள் கூடி பிறக்கக்கூடிய பெட்டை ஆடுகளின் உற்பத்தி திறன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களால் பிறக்கக்கூடிய குட்டிகளில் இறப்பு விகிதம் கூடியும், இனவிருந்திய பண்புகள் மற்றும் வளர்திறன் பாதிப்புடனும் காணப்படுகிறது.

    இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பட்டியில் இனவிருத்திக்காக வளர்க்கப்படும் கிடாக்களை மாற்ற வேண்டும். மாற்று மந்தைகளில் இருந்து பொலி கிடாய்களை தேர்வு செய்து இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய ரத்த சொந்தங்களை தவிர்த்து உற்பத்தியை மேன்மை அடைய செய்ய முடியும்.

    கொட்டகை பராமரிப்பு முறைகள்

    பகுதிநேர மேய்ச்சல் முறையில் ஆடுகளை லாபகரமாக வளர்க்கலாம். இரவு நேரங்களில் மட்டும் ஆடுகளை அடைப்பதற்கு கொட்டகை அமைப்பு ஏற்படுத்த வேண்டும். ஒரு ஆட்டிற்கு 10 சதுர அடி என்ற அளவில் இடவசதி ஏற்படுத்தி தரவேண்டும். தரையில் இருந்து 1 அடி உயரத்துக்கு கொட்டகையின் தரைத்தளம் இருக்குமாறு அமைக்க வேண்டும். சாதாரண மண் தரையின் அமைப்பே போதுமானது.

    கொட்டகையின் மத்தி உயரம் 10 முதல் 11 அடியாகவும், சாய்ப்பு உயரம் 78 அடியாகவும் இருக்குமாறு அமைத்தல் அவசியம். வெள்ளாடு கொட்டகையாக இருந்தால் 2½ அடி பக்கவாட்டு சுவரும், செம்மறியாட்டு கொட்டகையாக இருந்தால் 1 அடி பக்கவாட்டு சுவரும் தேவை. மேலும் தரையில் இருந்து 4 அடிக்கு கம்பிவலை அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.

    மேய்ச்சல் பராமரிப்பு முறைகள்

    மேய்ச்சலுக்கு சென்று வந்த ஆடுகளுக்கு குறைந்த விலை தாவர வகை கழிவுகள் மற்றும் உலர் தீவனங்களை கொடுத்து வளர்க்கும் போது அவற்றின் உடல் எடை நன்றாக கூடும். மேலும் ஒரு நாளைக்கு 8 மணி நேர மேய்ச்சல் அவசியமாகிறது. அதிக குளுமை இல்லாத நேரங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பலாம். காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்கு அனுப்பலாம் மேலும் மாலை வேளைகளில் ஆடுகள் நன்றாக மேயும்.

    ×