search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாணபுரீஸ்வரர் திருக்கோவில்"

    • ஆரோக்கியமான புத்திர பாக்கியம் பெறுவார்கள் என்பது காலகாலமாக வழங்கி வரும் நியதி.
    • அம்பாள் சோம கமலாம்பாள் என்றும் அழைக்கப் படுகிறார்கள்.

    இந்த அழகிய திருக்கோவில் கும்பகோணம் ரயில் சந்திப்பிலிருந்து வடமேற்கில் சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.

    மகா பிரளயத்தின் பொழுது மிதந்து வந்த அமுத கும்பத்தை சிவபெருமான் உடைக்க எண்ணியபொழுது

    இந்த இடத்தில் நின்று கொண்டுதான் கும்பத்தின் மீது பாணம் தொடுத்தார்.

    பாணம் தொடுத்த இடமாதலால் இந்த இடத்திற்கு பாணாத்துறை என்றும், இறைவன் பாணபுரீஸ்வரர் என்றும்,

    அம்பாள் சோம கமலாம்பாள் என்றும் அழைக்கப் படுகிறார்கள்.

    புராணத்தில் கூறப்படும் கோவில்களில் அதி முக்கியத்துவம் வாய்ந்த முதன்மையான கோவில் என்றும் சொல்லலாம்.

    உலக அழிவை, பிரளயத்தை இங்கு இருந்துதான் சிவபெருமான் தடுத்தார் என்பதால் உன்னதமான தலம்.

    இத்தலத்தில் மூன்று கால்கள் உடைய சிவபெருமானின் திரு உருவம் காணப்படுகிறது.

    பொதுவாக சிவபெருமான் லிங்க வடிவில்தான் காட்சியளிப்பார். இங்கு மூன்று கால் கொண்ட உருவத்தோடு காட்சியளிப்பது வியப்பினைத் தருகிறது.

    அகத்திய முனிவர் தனது சாபம் தீர ஸ்ரீ பாணபுரீஸ்வரம் வந்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றார்.

    சூரசேனனின் மனைவி காந்திமதியும் இங்கு வந்து தவம் புரிந்து சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றான்.

    காசிக்குச் சென்று விஸ்வநாதரை வணங்கிய வியாசருக்கு தரிசனம் கொடுத்த சிவபெருமான்.

    பொய் உரைத்து நிறைய பாவத்தைப் பெற்ற நீங்கள், காசியில் இங்கு வந்து என்னை வணங்கினால் உங்கள் பாவம் கழியாது.

    எனவே கும்பகோணம் சென்று அங்குள்ள மகாமகக் குளத்தில் மாசி மகத்தன்று நீராடி அப்படியே பாணபுரீஸ்வரம் சென்று அங்கு எம்மை பூஜித்தால்

    யாம் அங்கு வந்து உமது சாபத்தை விமோசனம் செய்வோம் என்று சொன்னதால் வியாசபெருமான் இங்கு வந்து சாபவிமோசனம் பெற்றார்.

    புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இந்த ஸ்தலத்திற்கு வந்து சிவபெருமானை மானசீகமாக வழிபட்டால்,

    ஆரோக்கியமான புத்திர பாக்கியம் பெறுவார்கள் என்பது காலகாலமாக வழங்கி வரும் நியதி.

    பிரளயம் முடிந்து முதலில் தோன்றிய சிவன் கோவில் என்பதால் மற்ற எந்தக் கோவில்களுக்கும் கிடைக்காத பெருமை, புகழ், அந்தஸ்து இந்தக் கோவிலுக்கு அதிகமாகவே உண்டு.

    ×