என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஊர்காவல்படை பணி"
- தேனி மாவட்ட ஊர்காவல் படையில் காலி யாக உள்ள பணியிடங்க ளுக்கு ஆண், பெண்கள் வருகிற 11-ந்தேதிக்குள் விண்ணப் பிக்கலாம்.
- நாள் ஒன்றுக்கு ரூ.560வீதம் 5 நாட்களுக்கு ரூ.2800 ஊதியமாக வழங்கப்படும்.
தேனி:
தேனி மாவட்ட ஊர்காவல் படையில் காலி யாக உள்ள பணியிடங்க ளுக்கு ஆண், பெண்கள் வருகிற 11-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு பிரவீன் உமேஷ்டோ ங்கரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது,
ஊர்காவல் படை பணிக்கு 20 வயது நிறைவடைந்த எஸ்.எஸ்.எல்.சி தேர்வு அல்லது தோல்வி அடைந்த சமூகசேவையில் ஆர்வம் உள்ள ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்க லாம். பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்படும். பணியில் சேர்ந்தவர்களுக்கு மாதத்தில் 5 நாட்கள் பணி வழங்க ப்படும். நாள் ஒன்றுக்கு ரூ.560வீதம் 5 நாட்களுக்கு ரூ.2800 ஊதியமாக வழங்க ப்படும். தகுதியுள்ளவர்கள் தேனி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் ஊர்காவல்படை அலுவலக த்தில் இன்று மற்றும் நாளை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சான்றிதழ்களின் நகலுடன் வட்டார தளபதி, மாவட்ட ஊர்காவல்படை அலுவல கம், தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முதல்தளம் என்ற முகவரிக்கு வருகிற 11-ந்தேதி க்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.