என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உடைந்த முட்டைகள்"
- கூத்தம்பாளையம் சோழன் நகர் பகுதியில் உள்ள ஒரு முட்டை மொத்த விற்பனை செய்யும் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.
- உடைந்த முட்டைகளில் நோய் தொற்று பரப்பக்கூடிய கிருமிகள் பெருகும் வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர், திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கவேல் குழுவினர் கூத்தம்பாளையம் சோழன் நகர் பகுதியில் உள்ள ஒரு முட்டை மொத்த விற்பனை செய்யும் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு 12 ஆயிரம் முட்டைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
ஆய்வின்போது ஒரு அறையில் உடைந்த மற்றும் அழுகிய நிலையில் கெட்டுப்போன 2 ஆயிரம் முட்டைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை ரோட்டோரத்தில் உள்ள சிறிய கடைகளுக்கு ஆம்லெட், ஆப்பாயில் தயாரிப்பதற்காகவும், சிறிய பேக்கரிகளில் கேக் தயாரிக்கவும் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அந்தமுட்டைகளை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட முட்டை விற்பனை செய்தவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது போன்ற முட்டைகளை பண்ணையில் இருந்து இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு வாங்கி வந்து சிறு வியாபாரிகள் மூலமாக விற்பனை செய்வது தெரியவந்தது. முட்டை பண்ணை உரிமையாளர்கள் தங்கள் பண்ணையில் உற்பத்தி ஆகும் உடைந்த முட்டைகளை தாங்களே பாதுகாப்பான முறையில் அழிக்க வேண்டும்.
உடைந்த முட்டைகளில் நோய் தொற்று பரப்பக்கூடிய கிருமிகள் பெருகும் வாய்ப்பு உள்ளதால் அதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுவலி போன்ற உடல்உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்ற உடைந்த முட்டைகளை எந்த பண்ணையில் இருந்து வாங்கி வந்தார்கள், யார் யாரெல்லாம் இதில் தொடர்பு உடையவர்கள் என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.