search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்பா நதிக்கோலம்"

    • பெரும்பாலும் வடமாநில பெண்களே பிரார்த்தனை செய்து வழிபட்டு வருகின்றனர்.
    • மண்டபம் கட்டும்போது இவ்வில்வேஸ்வர் சுயம்புலிங்கமாக கிடைக்கப் பெற்றது.

    இச்சன்னதி திருக்கோவிலின் பிரதான வாயிற்புறத்தின் நேர் எதிரே அமைந்துள்ளது.

    வெளியிலிருந்தபடடியே தரிசிக்கும் வகையில் இச்சன்னதி அமைந்துள்ளது.

    அருள்திகு பார்வதிதேவி சிவலிங்கத்தை ஆலிங்கனம் செய்வதுபோல அமைந்துள்ள இச்சன்னதியில்,

    பெரும்பாலும் வடமாநில பெண்களே பிரார்த்தனை செய்து வழிபட்டு வருகின்றனர்.

    திருமணமாகாத பெண்களுக்கு திருமணமும், திருமணமான பெண்களுக்கு மகப்பேறும், தான் நினைத்தபடியான வாழ்வினையும் பெற்று,

    அவரவர்களுக்கு ஏற்றார்போல் வாழ்வு அமைவதாகவும் இத்திருக்கோவிலின் சேவார்த்திகளின் நம்பிக்கையாக உள்ளது.

    அருள்மிகு வில்வேஸ்வரர் சன்னதி

    இத்திருக்கோவிலின் மண்டபம் கட்டும்போது இவ்வில்வேஸ்வர் சுயம்புலிங்கமாக கிடைக்கப் பெற்றது.

    சுமார் நான்கடி உயரத்தில் அமைந்துள்ள வில்வேசுவரர் சன்னதி இத்திருக்கோவிலின் ஸ்தலவிருட்சமான வில்வமரத்தின் பக்கத்தில் உள்ளது.

    பொதுவாக வடமாநிலத்தவர்கள் இச்சன்னதியை அர்ச்சித்தும் இவ்வில்வேஸ்வரரை வணங்கியும் செல்கின்றனர்.

    ×