search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நலதிட்டம்"

    • அரியலூர் மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது
    • அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் முதல்கட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் 15 -ந் தேதி தொடங்கப்பட்டு 1,51,038 எண்ணிக்கையிலான மகளிர் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை பெறுகின்றனர்.

    இதில் அரியலூர் வட்டத்தை சேர்ந்த 51,893 மகளிரும், ஜெயங்கொண்டம் வட்டத்தைச் சேர்ந்த 53,726 மகளிரும், செந்துறை வட்டத்தைச் சேர்ந்த 22,484 மகளிரும், ஆண்டிமடம் வட்டத்தைச் சேர்ந்த 22,935 மகளிரும் பயன்பெற்று வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக இன்றையதினம் வாலாஜாநகரம் ஊராட்சி, அன்னலட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக 6,217 மகளிருக்கு உரிமைத்தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

    இதில் அரியலூர் வட்டத்தை சேர்ந்த 1,830 மகளிரும், ஜெயங்கொண்டம் வட்டத்தைச் சேர்ந்த 2,279 மகளிரும், செந்துறை வட்டத்தைச் சேர்ந்த 1,059 மகளிரும், ஆண்டிமடம் வட்டத்தைச் சேர்ந்த 1,049 மகளிரும் பயன்பெற உள்ளனர்.

    இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்), பரிமளம் (உடையார்பாளையம்), மாவட்ட நிலை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கூட்டத்துக்கு, கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து பெற்ற 434 கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    முன்னதாக அவர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.5,900 மதிப்பில் தையல் இயந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.6,552 மதிப்பில் பித்தளை சலவைப் பெட்டி என மொத்தம் 4 பயனாளிகளுக்கு ரூ.24,904 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து 2022-2023-ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற அகில இந்திய தேர்வில் மெக்கட்ரானிக்ஸ் பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று கேடயம் பெற்ற மாணவி நித்யா மற்றும் மாணவர் சந்தோஷ் ஆகியோரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும், அவர், ஆட்சியரக அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய தகவலியல் மையத்தில் பயிற்சி மேற்கொண்ட கூவத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கலைவாணி, தனித் துணை ஆட்சியர் இளங்கோவன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், தேசிய தகவலியல் மையத்தின் மாவட்ட அலுவலர் ஜான் பிரிட்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×