search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வாதிகார நாடு"

    • மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறும் என்று அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • இன்னும் 6 மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தெப்பகக் குளம் கீழ்க்கரையில் நடந்தது. ஒன்றிய செ யலாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டு 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    முன்னாள் முதல மைச்சரின் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை மாவட்டந்தோறும் முதல்-அமைச்சர் அறி வித்தபடி கொண்டா டப்பட்டு வருகிறது. இந்திய துணை கண்டத்தில் எந்த முதல்வரும் செய்யாத சாதனையை கருணாநிதி செய்துள்ளார். தனது 14 வயது முதல் 94 வயது வரை தமிழக மக்களுக்காக பணியாற்றி உள்ளார்.

    தற்போது அ.தி.மு.க. திராவிடத்தை விட்டு விட்டு பா.ஜ.க.விடம் அடிமை கட்சியாக மாறியுள்ளது. பா.ஜ.க. கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்களை அ.தி.மு.க. ஆதரித்தது. தேர்தலுக்காக அ.தி.மு.க. பல்வேறு நாடகங்களை நடத்தி வருகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    மத்திய பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் பா.ஜ.க. அரசு உள்ளது. இன்னும் 6 மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

    மோடி ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது. சாதி, மத மோதல்கள், சிறுபான்மை யினர் மீது தாக்குதல் நடந்து வருகிறது.

    2 ஆண்டு தி.மு.க. ஆட்சியல் 85 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற் றப்பட்டுள்ளது. இதனை வீடு தோறும் பிரச்சாரம் செய்ய வேண்டும். 39 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும். இதுவே தி.மு.க.வின் பொற்கால ஆட்சிக்கு அமையும் சான்றாகும். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் ஆர்.வி.எஸ். அரங்கசாமி நன்றி கூறினார்.

    ×