search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகிசாசூர வதம் நிகழ்ச்சி"

    • விழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை, பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும் மாலையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.
    • நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வில்-அம்பு போடுதல், மகிஷாசூர வதம் நிகழ்ச்சி நேற்று பழனி கோதைமங்கலத்தில் நடைபெற்றது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்புடன் கொண்டா டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி பழனி முருகன் கோவில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் காப்பு க்கட்டு தலுடன் தொட ங்கியது. விழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை, பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும் மாலையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.

    நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வில்-அம்பு போடுதல், மகிஷாசூர வதம் நிகழ்ச்சி நேற்று பழனி கோதைமங்கலத்தில் நடைபெற்றது. இதை யொட்டி பழனி முருகன் கோவிலில் பூஜை முறைகள் மாற்றப்பட்டன. பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடந்தது. அதையடுத்து 5.30 மணிக்கு நடைபெறும் சாயர ட்சை பூஜை மதியம் 1.30 மணிக்கே நடத்தப்பட்டது. பின்னர் மாலை 3 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து பராசக்திவேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு புறப்பாடாகி சென்றது. அதையடுத்து கோவில் நடை அடைக்கப்பட்டது. இதனால் பகல் 11 மணிக்கு பிறகு பக்தர்கள் மலை க்கோ விலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

    பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு முத்துக்கு மாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோதைமங்கலம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாலை 6 மணிக்கு மேல் வில்-அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது முத்துக்குமார சுவாமி வில்-அம்பை எய்து மகிஷாசூரனை வதம் செய்தார். பின்னர் மீண்டும் முத்துக்குமாரசுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு திரும்ப வந்த பின்பு அர்த்தஜாம பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலைவந்தடைந்தது.

    இன்று வழக்கம்போல் முருகன் கோவில் நடை திறக்க ப்பட்டு 6 கால பூஜை கள் நடைபெற்று வருகிறது. மேலும் நவராத்திரி விழாவை யொட்டி நிறுத்தப்பட்ட தங்கரத புறப்பாடும் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.

    ×