search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the festival of ஐப்பசி"

    • ராசிபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது.
    • இக்கோவிலில் ஐப்பசி தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறு வது வழக்கம். அதன்படி நேற்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தேர்த்திரு விழா தொடங்கியது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கம்பம் எப்போதும் நடப்பட்டு இருக்கும். இதனால் இங்குள்ள அம்மனை நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    பூச்சாட்டுதல்

    இக்கோவிலில் ஐப்பசி தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறு வது வழக்கம். அதன்படி நேற்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தேர்த்திரு விழா தொடங்கியது.

    இதையொட்டி மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகள் வெடித்து சிவன் கோவிலில் இருந்து அம்மன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது பக்தர்கள் அம்மனுக்கு பூக்களை வழங்கி வணங்கினர். சுமார் 1 டன் அளவுக்கு பக்தர்கள், மண்டபக் கட்டளைதாரர்கள் அளித்த பூக்களால் அம்மன் மலர் குவியலுக்குள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நாளை (26-ந் தேதி) கம்பம் நடும் விழா நடைபெறுகிறது. அன்று இரவு 10 மணிக்கு குழந்தை வரம் வேண்டுவோருக்கு தயிர் சாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து நவம்பர் மாதம் 6-ந் தேதி இரவு பூவோடு பற்ற வைத்தல், விடியற்காலை 5 மணிக்கு பூவோடு எடுத்தல் நடக்கிறது. 7-ந் தேதி இரவு கொடியேற்று விழாவும், 8-ந் தேதி காலையில் செல்லாண்டி அம்மன் கோவிலில் அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல், இரவு 10 மணிக்கு அக்கினி குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    9-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அக்கினி குண்டம் பிரவேசித்தல் நிகழ்ச்சியும், அன்று மாலை 4 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. 10-ந் தேதி வண்டிவேடிக்கை நடக்கிறது. 11-ந் தேதி இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் ஊர்வலம் நடக்கிறது. அன்று இரவு சப்தாபரணம், வாணவேடிக்கை, நாதஸ்வர கச்சேரி, நையாண்டி மேளதாளத்துடன் நடக்கிறது.

    விழாவையொட்டி தினந்தோறும் கட்டளைதாரர்கள் சார்பில் அம்மன் ஊர்வலம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் நந்தகுமார், தக்கார் கீதாமணி மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×