search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "களை மேலாண்மை பணி"

    • இப்பகுதி விவசாயிகள் வாழை சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை முதலீடு செய்து உள்ளனர்.
    • வாழை சாகுபடியில் களை மேலாண்மைக்கு புதிய முயற்சியாக எந்திரம் மூலம் களை எடுக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

    முத்தூர்:

    முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம் வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல் வருவாய் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகிறது.

    இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கால்வாய் வழியாக கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு ஆண்டுதோறும் இரு பிரிவுகளாக திறந்துவிடப்படும் தண்ணீரை பயன்படுத்தி நஞ்சை சம்பா நெல் மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள், காய்கறி பயிர்கள் சாகுபடி நடைபெற்று வருகிறது.

    இதன்படி இப்பகுதிகளில் 10 மாதங்களில் நன்கு வளர்ந்து கூடுதல் பலன் அளிக்கும் வாழை சாகுபடி கடந்த ஜூலை மாதம் முதல் தொடங்கப்பட்டது. இதன்படி இப்பகுதி விவசாயிகள் வாழை சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை முதலீடு செய்து உள்ளனர்.

    இதன்படி வாழை சாகுபடியில் களை மேலாண்மைக்கு புதிய முயற்சியாக எந்திரம் மூலம் களை எடுக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

    இதன்படி மோட்டார் என்ஜின் மூலம் இயங்கும் களை எந்திரம் வாழை சாகுபடியில் வேர்ப்பகுதி, நடுப்பகுதி, இலை பகுதிகளில் எந்த சேதமும் விளைவிக்காமல் முற்றிலும் வளர்ந்துள்ள புல், செடி களைகளை அகற்றி வயலில் உள்ள மண்களில் மேலே தோண்டி கொண்டு வந்து அதே வாழை கன்றுகளை சுற்றிலும் மண்களால் சமன் செய்து விடுகின்றன.

    இதன்படி இப்பகுதிகளில் வாழை சாகுபடி மேலாண்மையில் களை எடுக்கும் பணிக்கு எந்திரம் பயன்படுத்தப்படுவது வாழை சாகுபடி விவசாயிகளின் நேரம் மேலாண்மையும், பொருளாதாரம் மேலாண்மையும், கூலியாட்கள் பற்றாக்குறையும் நிறைவு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×