search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்களில் கொள்ளை"

    • ரெயில் பயணிகள் சங்கம் எச்சரிக்கை
    • நடைமேடைகளில் கண்காணிப்பு கேமரா வைக்க வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயிலில் செல்லும் பயணிகளிடம் இருந்து தொடர் கொள்ளை சம்பவங்கள் நடக்கிறது.

    இது குறித்து அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்க தலைவர் மற்றும் தெற்கு ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினருமான நைனா மாசிலாமணி கூறியதாவது:-

    அரக்கோணம் ரெயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வேலைக்கும், மாணவர்கள் பள்ளி,கல்லூரிகளுக்கும் சென்று வருகின்றனர்

    6-வது மற்றும் 7-வது பிளாட்பாரத்தில் அரக்கோணத்தில் இருந்து தக்கோலம், திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றது. இதே போல் சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் வரும் மின்சார ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    அரக்கோணம் - தக்காலம் ரெயில் நிலையத்துக்கு இடையே பெண்களை குறி வைத்து கத்தியால் தாக்கி நகை, பணத்தை கொள்ளை அடிப்பதும் வழக்கமாக உள்ளது.

    இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தொடர்ந்து புகார் அளித்தும். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. நேற்றும் வயதான மூதாட்டி ஒருவரை கத்தியால் வெட்டி பணம், நகையை கொள்ளை யடித்துள்ளனர்

    இந்த சம்பவம் அதிர்ச்சியும்,வேதனையும் அளிக்கிறது.

    இந்த சம்பவத்தில் இதுவரை கொள்ளையனை பிடிக்கவில்லை. இதனால் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அவர்களின் உடமை களுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் பணியில் இருக்கும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரெயில் நிலையத்தில் இயங்கும் ரெயில்வே போலீஸ் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது இல்லை. இதை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.

    அரக்கோணம் பயணிகள் சங்கம் சார்பாக, சங்க உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஏற்கனவே 6, 7-வது நடைமேடைகளில் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கண்காணிப்பு கேமரா அமைத்திருந்தால் கொள்ளையர்கள் பிடித்திருக்கலாம். எதையும் செய்யாமல் மெத்தன போக்கை ரெயில்வே துறை பின்பற்றி வருகிறது.

    எனவே இதை அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கி றோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை விரைவில் பிடிக்க வேண்டும்.

    இந்த போன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் அரக்கோணம் ரெயில்வே அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்கம் சார்பாக போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×