search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி எஸ்.எம்.எஸ்.கள்"

    • டிஜிட்டல் பண பரிவர்த்தனை வாயிலாக, பண மோசடி அதிக அளவில் நடந்து வருகிறது.
    • போலி எஸ்.எம்.எஸ்.,களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    திருப்பூர்:

    மின் கட்டணம் செலுத்துவது, மின் இணைப்புக்கு விண்ணப்பிப்பது என மின்வாரியம் தொடர்புடைய அனைத்து பணிகளும் ஆன்லைன் மயமாகிவிட்ட நிலையில், மின் நுகர்வோரை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கில் சில போலி எஸ்.எம்.எஸ்.,களும் உலா வருகின்றன.

    அதன்படி, உங்கள் மின் கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளது. உடனடியாக மின் கட்டணம் செலுத்துங்கள். தவறினால், உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.உடனடியாக இந்த எண்ணுக்கு அழையுங்கள் என்ற வாசகம் தாங்கி, ஒரு மொபைல் எண்ணுடன் கூடிய எஸ்.எம்.எஸ்., வந்த வண்ணம் உள்ளது. இது மின் நுகர்வோர் மத்தியில் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

    இதற்கும் மேலாக இன்னும் சில எஸ்.எம்.எஸ்.,களில், ஒரு மொபைல் எண்ணை குறிப்பிட்டு, மின் கட்டண பாக்கியை அந்த எண்ணுக்கு செலுத்த வேண்டும் எனவும், எஸ்.எம்.எஸ்., வருகிறது.

    இது குறித்து திருப்பூர் மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், டிஜிட்டல் பண பரிவர்த்தனை வாயிலாக, பண மோசடி அதிக அளவில் நடந்து வருகிறது. அதுபோன்ற மோசடி தான், இதுபோன்றஎஸ்.எம்.எஸ்.,கள். இதுபோன்ற தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். மின் கட்டணம் செலுத்தியதற்கான தகவல், செலுத்த வேண்டிய தகவல் குறித்த விவரங்கள் மட்டுமே மின்வாரியத்தினர் சார்பில் எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படுகிறது என்றனர்.

    நுகர்வோர் சிலர்கூறுகையில்,போலி எஸ்.எம்.எஸ்.,களை அடையாளம் காண்பது, கடினமான காரியமாக உள்ளது. எஸ்.எம்.எஸ்., அதில் வரும் லிங்க் ஆகியவற்றை தொடும் போதே, நமது வங்கிக்கணக்கு, இ-மெயில் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள், மர்ம நபர்களால் சேகரிக்கப்பட்டு, பண மோசடி நடக்கிறது என போலீசார் எச்சரிக்கின்றனர். எனவே போலி எஸ்.எம்.எஸ்.,களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    ×