search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரைப்பாலத்தில் தண்ணீர் தேக்கம்"

    • பராமரிப்பு இல்லாத காரணத்தால் தரைப்பாலத்தில் இருந்து நீர் வெளியேற அமைக்கப்பட்டிருந்த 2 வாய்க்கால்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணல்மேடாக மாறியது.
    • பாலத்தை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருவதோடு இரவு நேரங்களில் பைக் விபத்துகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயிலாடும்பாறை - பொன்னன்படுகை இடையே சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லாத காரணத்தால் தரைப்பாலத்தில் இருந்து நீர் வெளியேற அமைக்கப்பட்டிருந்த 2 வாய்க்கால்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணல்மேடாக மாறியது.

    இதனால் மழை பெய்யும் நேரங்களில் நீர் வெளியேற முடியாமல் தரைப்பாலம் முழுவதும் மழை நீர் தேங்கி காணப்படும். அதுபோன்ற நேரங்களில் தரைப்பாலத்தை கடந்து செல்ல பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். தரைப்பாலத்தில் நீர் உடனடியாக வெளியேறும் வகையில் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் தற்போது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பொன்னன்படுகை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தற்போது தரைப்பாலத்தில் மழைநீர் குளம் போல தேங்கி காணப்படுகிறது. எனவே பாலத்தை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருவதோடு இரவு நேரங்களில் பைக் விபத்துகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் சில வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு அதிக தொலைவு உடைய குமணன்தொழு சாலையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

    இதனால் வாகன ஓட்டிகளுக்கு வீண் அலைச்சல் ஏற்படுகிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும். அல்லது அதே இடத்தில் புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×