search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் கிராம சாலை திட்டம்"

    • தாராபுரம் ஒன்றியத்தில் புதிய பாலம் அமைக்க 1.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • பணிகள் சுழற்சி முறையில் அனைத்து ஒன்றியங்களுக்கும் ஒதுக்கப்படுகிறது என்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 2023-24ல் 10 ஒன்றியங்களில் 191 கி.மீ., நீளத்துக்கு 107.53 கோடி ரூபாய் மதிப்பிலான 44 ரோடு பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் திருப்பூர், மூலனூர், பல்லடம் ஒன்றியங்கள் விடுபட்டுள்ளன.

    அதன்படி அவிநாசி ஒன்றியத்தில் (15 கி.மீ., ரோடு) 10.56 கோடி ரூபாய், குடிமங்கலத்தில் (9.76 கி.மீ.,) ரூ.5கோடி, தாராபுரத்தில் (56 கி.மீ.,) - ரூ.33.11 கோடி, காங்கயத்தில் (21.39 கி.மீ.,) ரூ.11.99 கோடி, குண்டடம் (20 கி.மீ.,) - ரூ. 11.84 கோடி, மடத்துக்குளம் (4.05 கி.மீ.,) ரூ. 1.81 கோடி.

    பொங்கலூர் (7.36 கி.மீ.,) ரூ.3.13 கோடி, வெள்ளகோவில் (8.33 கி.மீ.,) ரூ.4.01 கோடி, ஊத்துக்குளி (13.84 கி.மீ.,) ரூ. 9.65 கோடி, உடுமலை (31.18 கி.மீ.,) ரூ.16.99 கோடி வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தாராபுரம் ஒன்றியத்தில் புதிய பாலம் அமைக்க 1.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை பணிகள் தேர்வில் பாரபட்சம் காட்டுகின்றனர்.மத்திய, மாநில அரசு திட்டப்பணிகளை, அனைத்து ஒன்றியங்களுக்கும், பாரபட்சமின்றி பகிர்ந்து வழங்க வேண்டும். விரைந்து பணிகளை முடிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

    இது குறித்து, ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளிடம் கேட்டபோது, விடுபட்ட ஒன்றியங்களுக்கு மற்றொரு திட்டங்களில் ரோடு பணி ஒதுக்கப்படும். பணிகள் சுழற்சி முறையில் அனைத்து ஒன்றியங்களுக்கும் ஒதுக்கப்படுகிறது என்றனர்.

    ×