search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விற்பனை சரிவு"

    • தருமபுரியில் பண்டிகை காலங்களில் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து போனதால் வெல்லம் விற்பனை சரிந்து போனது.
    • கிலோ ரூ. 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    தீபாவளி பண்டிகை என்றாலே உருண்டை வெல்லத்தை வைத்து வீடுகளில் பாட்டிகள், அதிரசம், சீடை, கடலை மிட்டாய் உருண்டை, முந்திரி திராட்சை உருண்டை, பாதாம் திராட்சை உருண்டை, அவல் உருண்டை, அரிசி மிட்டாய் உருண்டை, பொரி உருண்டை, கமர்கட், எள்ளுருண்டை, வெல்லம் பாகில் ஊற வைத்த தேன்குடல், ஜவ்வரிசி உருண்டை, கேழ்வரகு மாவு உருண்டை, திணை உருண்டை, வேர்க்கடலை உருண்டை எனகுழந்தைகள் நன்கு வளரவும், பெரியவர்கள் களைப்படையாமல் உழைக்கவும் புரதச்சத்து மிகவும் அவசியம். இந்த புரதச்சத்தை வாரி வழங்கும் பொருட்களைக் கொண்டு வீடுகளில் பெரியவர்கள் பலவகையான இனிப்பு வகைகளை செய்து அசத்துவர்.

    இந்த தின்பண்டங்கள் செய்வ தற்கு பண்டைய காலத்தில் இருந்து சிறந்த முறையில் உருண்டை வெல்லம் தயார் செய்து அதில் இனிப்பு வகைகளை செய்து அசத்தி வந்தனர். இன்றும் பாரம்பரியம் குறையாமல் தருமபுரி மாவட்டத்தில் பழைய தருமபுரி, முத்துக்கவுண்டன் கொட்டாய், கட கத்தூர், சோகத்தூர், பாப்பா ரப்பட்டி, பாலக்கோடு, பாப்பி ரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட பகுதிகளில் கரும்பு உருண்டை வெல்லம் உற்பத்தி செய்வது பிரதான தொழிலாக இருக்கிறது.

    இந்தப் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட உருண்டை வெல்லம் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு உற்பத்தி நிலையத்தில் சுமார் 5 முதல் 10 பேர் வரை பணிபுரிந்து வருகின்றனர்.

    இங்கு உற்பத்தி செய்யப் படும் வெல்லம் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் உள்ள மைசூர், மாண்டியா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஆந்திராவிற்கு விற்பனைக்காக அனுப்பப் படுகிறது. இந்நிலையில் ஆயுதபூஜை, தசரா, தீபாவளி, பொங்கல் பண்டிக்கை காலங்களில் உருண்டை வெல்லம் உற்பத்தி அதிகரித்து, விலை உயர்ந்து விற்பனையாகும்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள உருண்டை வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு தேவையான கரும்புகள் கர்நாடகா மாநிலத்தில் மாண்டியா, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்து உருண்டை வெல்லம் உற்பத்தி செய்து வந்தனர். இந்நிலையில் போதிய வருமானம் கிடைக்காததால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு உருண்டை வெல்லம் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டது. இந்நிலையில் ஒரு சில ஆலைகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.

    இதனால் கடந்த காலங்களில் பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்களில் வெல்லம் உற்பத்தி குறைவாக இருந்ததால் நல்ல விலை கிடைத்து வந்தது.இது குறித்து வெல்ல உற்பத்தியாளர்கள் கூறியதாவது;- தருமபுரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக உருண்டை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் உருண்டை வெல்லம் உற்பத்தி செய்யும் பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகைக்காக உருண்டை வெல்லம் கிலோ ரூ. 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால் பண்டிகைக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு முன்பதிவுகளும் உற்பத்தியில் தொடங்கும் நிலையில், தற்போது மக்களிடையே வெல்லம் வாங்கி வீடுகளில் இனிப்பு தயாரிக்கும் பழக்கம் குறைந்து.

    நேரடியாக கடைகளுக்கு சென்று இனிப்பு வாங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதனால் போதிய அளவு முன்பதிவு கிடைக்காமல் உள்ளது. இதனால் உருண்டை வெல்லம் உற்பத்தியாளர்களுக்கு விற்பனையும் வருவாயும் குறைந்த அளவே இருந்து வருகிறது.

    இதனால் இந்த ஆண்டு பண்டிகைக்கு உருண்டை வெல்லத்தின் விலையும் இல்லை, போதிய வருவாய் கிடைக்கவில்லை. இதனால் கரும்பு விவசாயிகளும், உருண்டை வெல்ல உற்பத்தி ஆலைகள் மற்றும் தொழிலாளர் தீபாவளி பண்டிகைக்கான வருவாய் இல்லாமல் தவித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×