search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹூரோ மோட்டோகார்ப்"

    • புதிய மேக்சி ஸ்கூட்டரில் கீலெஸ் இக்னிஷன், டூரிங் திறன் வழங்கப்படலாம்.
    • ஹீரோ மேக்சி ஸ்கூட்டருக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.

    ஹூரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய மேக்சி ஸ்கூட்டர் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் 2023 EICMA நிகழ்வில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. இதற்கான டீசரை ஹீரோ நிறுவனம் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் ஹீரோ நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் கரிஸ்மா XMR மாடலில் மட்டும் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கி இருக்கிறது. புதிய மேக்சி ஸ்கூட்டரிலும் இதுபோன்ற என்ஜின் வழங்கப்படுமா அல்லது முற்றிலும் புதிய என்ஜின் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    புதிய மேக்சி ஸ்கூட்டரின் டிசைன் ஏற்கனவே வெளியான டிசைன் பேடன்டில் இருப்பதை போன்றே காட்சியளிக்கிறது. ஹீரோவின் புதிய மேக்சி ஸ்கூட்டரில் உள்ள அன்டர்போன் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வேறு ஸ்கூட்டர்களில் இதுவரை அதிகளவில் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது போன்ற அம்சம் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் மேக்சி மற்றும் ஸ்போர்ட் ஸ்கூட்டர்களில் வழங்கப்படுகிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய மேக்சி ஸ்கூட்டரில் கீலெஸ் இக்னிஷன், டூரிங் திறன் வழங்கப்படலாம். இந்த மாடலில் பெரிய விண்ட்-ஸ்கிரீன் மற்றும் டாப் பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மேக்சி ஸ்கூட்டருடன் ஹீரோ நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களையும் அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

    ×