search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி கடல்"

    • 2 நாட்களாக அலைகள் `புளோரசன்ட் நீல’ நிறத்தில் நிறத்தில் ஜொலித்தன.
    • அலை நீல நிறத்தில் ஜொலித்தபடி கரையை முட்டி மோதி கரைந்தன.

    புதுச்சேரி:

    வங்க கடலில் கடந்த 2 நாட்களாக அலைகள் 'புளோரசன்ட் நீல' நிறத்தில் ஜொலித்தன.

    புதுச்சேரி ராக் கடற்கரையில், நேற்று கடல் அலை நீல நிறத்தில் ஜொலித்தபடி கரையை முட்டி மோதி கரைந்தன. இந்த அழகிய காட்சியை மக்கள் வியப்புடன் பார்த்து வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

    இதேபோல் மரக்காணம் பகுதிகளிலும் கடல் அலை நீல நிறத்தில் நேற்று ஜொலித்தது. இதுகுறித்து கடல் வாழ் உயிரின உயர் ஆய்வு மைய பேராசிரியர் ஒருவர் கூறியிருப்பதாவது:-

    கடல் என்பது அதிக அளவு உயிரினங்கள் உள்ள பல்லுயிர் நிறைந்த பகுதி. இதில் நம் கண்களுக்கு தெரியாத பாக்ட்டீரியா மற்றும் பாசி போன்ற உயிரினங்கள் அதிகம் உள்ளன.

    அதுபோன்று கடலில் வாழும் ஒரு செல் உயிரியான 'டைனோ ப்ளாச்சு லேட்' வகையை சேர்ந்த 'நாட்டிலுக்காசின்டிலன்ஸ்' எனும் மிதவை நுண்ணுயிரியால் இப்போது கடல் நீல நிறத்தில் ஜொலித்து வருகிறது. இது 'சீ பார்க்கல்ஸ் அல்லது கடல் பொறி என அழைக்கப்படுகிறது.

    இந்த மிதவை நுண்ணுயிரி, கடலில் உள்ள நீரின் தன்மை மற்றும் அதற்கான உணவு ஊட்டச்சத்து சரியான விகிதத்தில் அமையும்போது சூரிய வெளிச்சத்தில் சார்ஜ் செய்து கொண்டு, இருளில் ஒளி வீசி ஜொலிக்கிறது.

    இந்த நுண்ணுயிரியின் உடலில் உள்ள வேதிப்பொருளான லூசிபெரின், லூசிபரேஸ் ஆகியவை ஆக்சிஜனோடு சேரும்போது ஒளி வெளி யாகிறது.

    அப்போது அந்தப் பகுதியின் அலை 'புளோ ரசன்ட் நீல' நிறத்தில் ஜொலிக்கும். இந்த நிகழ்வை, பயோலுமினெ சென்ஸ் என அழைக்கப்படுகிறது' என்றார்.

    • நுண்ணுயிர்கள் பெருக்கத்தால் இந்த மாற்றம் ஏற்படுவதாக ஏற்கனவே கடல் ஆராய்ச்சியாளர் தெரிவித்திருந்தார்.
    • அரசு முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கடல்பகுதி கடந்த 2 தினங்களாக அலை சீற்றத்துடன் காணப்பட்டது.

    புதுவை பழைய சாராய ஆலை முதல் வைத்திக்குப்பம் மாசிமக திடல் வரை ஒரு கி.மீ. நீளத்துக்கு கடல் நீர் மீண்டும் செந்நிறமாக காட்சி அளிக்கிறது.

    இதை சுற்றுலா பயணிக ளும், உள்ளூர் மக்களும் ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர்.

    4-வது முறையாக புதுவை கடல் செந்நிறமாக காட்சி அளிக்கிறது.

    ஏற்கனவே கடந்த மாதம் 17-ந் தேதி முதல்முறையாகவும், 19-ந் தேதி 2-வது முறையாகவும், கடந்த 1-ந் தேதி 3-வது முறையாகவும் கடல் செந்நிறமாக காட்சியளித்தது.

    இந்நிலையில் இன்று 4-வது முறையாக கடல் செந்நிறமாக மாறியது.

    கடலில் ஏற்பட்டுள்ள நுண்ணுயிர்கள் பெருக்கத்தால் இந்த மாற்றம் ஏற்படுவதாக ஏற்கனவே கடல் ஆராய்ச்சியாளர் தெரிவித்திருந்தார்.

    இருப்பினும் புதுவையில் அடிக்கடி கடல் நீர் செந்நிறமாக மாறும் சம்பவம் மீனவர்கள் மற்றும் பொது மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து அரசு முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×