search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் முடக்கம்"

    • திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் பெய்ய துவங்கிய மழை தொடர்ந்து ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது.
    • சாலையில் தாழ்வான பகுதிகளில் அங்காங்கே தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் பெய்ய துவங்கிய மழை தொடர்ந்து ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. மேலும் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பல்லடத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி நின்றது. மேலும் மழைநீருடன் கழிவு நீரும் கலந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். அண்ணா நகர், மகாலட்சுமிபுரம், பச்சாபாளையம் காலனி, பனப்பாளையம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் பச்சாபாளையம், பனப்பாளையம், காலனி பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றுவதிலேயே அவர்களுக்கு விடிந்து விட்டது. மேலும் பல்லடம் - தாராபுரம் சாலையில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக போடப்பட்டிருந்த மண் மழையினால் அரித்துச் செல்லப்பட்டது. அத்துடன் ரோடுகளில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய செய்து ஊர்ந்து சென்றன. இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களில் ஒரு சிலரின் மோட்டார் சைக்கிள்களில் பழுதாகி நின்றது. மேலும் சாலையில் தாழ்வான பகுதிகளில் அங்காங்கே தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    ×