search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக சர்க்கரை வியாதி தினம்"

    • 19 வயதுக்குட்பட்டவர்களில் 5 பேரில் ஒருவருக்கு டைப்-1 வகை சர்க்கரை வியாதி இருக்கிறது.
    • வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்யாவிட்டால் டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறி உள்ளார்கள்.

    சென்னை:

    இன்று உலக சர்க்கரை வியாதி தினம். சர்க்கரை வியாதியை பொறுத்தவரை நாள்பட்ட நோய். இது வந்தாலே வாழ்க்கை முழுவதும் மருந்து மாத்திரையோடுதான் வாழ வேண்டிய சூழ்நிலை.

    இந்த வியாதி வந்தால் கண் பார்வையிழப்பு, சிறுநீரக பாதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

    இந்தியாவில் சுமார் 10 கோடி பேருக்கு நீரிழிவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த 20 ஆண்டுகளில் இரு மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்யாவிட்டால் டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறி உள்ளார்கள்.

    இந்திய உணவுகளை பொறுத்தவரை சர்க்கரை, கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளே புழக்கத்தில் உள்ளது. எனவே உணவு விசயத்தில் கவனமும், உணவு கட்டுப்பாடும் அவசியம்.

    உலக அளவில் உறுதி செய்யப்படும் 7 சர்க்கரை வியாதிகளில் ஒருவர் இந்தியராக இருக்கிறார்கள்.

    19 வயதுக்குட்பட்டவர்களில் 5 பேரில் ஒருவருக்கு டைப்-1 வகை சர்க்கரை வியாதி இருக்கிறது.

    டைப்-1ஐ பொறுத்தவரை உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்புகள், கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும செல்களை சேதப்படுத்துகிறது. இவர்களுக்கு தினமும் இன்சுலின் ஊசி போட வேண்டும்.

    டைப்-2 வகையை பொறுத்தவரை தடுக்க முடியும். அதற்கு சீரான உணவை சாப்பிடுவது, தினமும் உடல் பயிற்சிகளில் ஈடுபடுவது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆபத்தை வெகுவாக குறைக்கும் என்கிறார்கள்.

    மக்கள் தொகை அடிப்படையில் கோவாவில் 26.4 சதவீதமும், புதுவையில் 26.7 சதவீதமும் உள்ளது. தமிழகத்தில் 14.4 சதவீதத்தினரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வாழ்க்கை முறை, உணவு முறையில் ஏற்படுத்தும் மாற்றங்கள்தான் சர்க்கரை வியாதி வருவதை கட்டுப்படுத்தும்.

    ×