search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்மட்டம் 131 அடியை எட்டியது"

    • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கன மழை பெய்து வருவதால் முல்லை ப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது.
    • 152 அடி உயரமுள்ள அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 130.95 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லை ப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. 152 அடி உயரமுள்ள அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 130.95 அடியாக உள்ளது. வரத்து 782 கன அடி. திறப்பு 105 கன அடி. இருப்பு 4919 மி.கன அடி.

    இதே போல் வைகை அணையின் நீர் மட்டமும் முழு கொள்ளளவை எட்டியதால் கடந்த 10-ந் தேதி முதல் திண்டுக்கல், மதுரை மாவட்ட முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 70.41 அடியாக உள்ளது. வரத்து 748 கன அடி. திறப்பு 969 கன அடி. இருப்பு 5934 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.70 அடி. வரத்து 170 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 429 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.47 அடியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அணைக்கு வரும் 115 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    தொடர்ந்து தேனி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலை களில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்க ப்பட்டுள்ளது.

    ×