search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாக தோஷ நிவர்த்தி"

    • பரிகாரத் தலங்களில் செய்யும் வழிபாடுகள் மூலமாக ராகு, கேது தோஷங்கள் நம்மை விட்டு விலகுகின்றன.
    • சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது மிகுந்த ஆச்சாரத்துடன் செய்ய வேண்டும்.

    பரிகாரத் தலங்களில் செய்யும் வழிபாடுகள் மூலமாக ராகு, கேது தோஷங்கள் நம்மை விட்டு விலகுகின்றன.

    சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது மிகுந்த ஆச்சாரத்துடன் செய்ய வேண்டும்.

    சைவ உணவு விரதம் மேற்கொள்ள வேண்டும்.

    பிக்னிக் செல்லது போல் செல்லாமல், பக்தி யாத்திரையாக மேற்கொள்ள வேண்டும்.

    தான தர்மங்களை மனம் கோணாமல், மனமுவந்து நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.

    * காளஹஸ்தி

    திருப்பதிக்கு மிக அருகில் உள்ளது. சென்னை-திருப்பதி சாலையில் உள்ளது.

    ரேணிகுண்டா ரயில் நிலையத்திலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் காளஹஸ்தி செல்லலாம்.

    * திருநாகேஸ்வரம்

    கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு நாகருக்கு பாலாபிஷேகம் செய்யலாம்.

    * திருமணஞ்சேரி

    இது கும்பகோணத்திலிருந்து குத்தாலம் சென்று, அங்கிருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது.

    * திருப்பாம்புரம்

    கும்பகோணத்திலிருந்து திருவாரூர், நாகப்பட்டினம் - காரைக்கால் சாலையில் உள்ளது.

    * வாழைத் தோட்டத்து அய்யன் கோவில்

    திருப்பூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் மங்கலம் கிராமத்துக்கு அருகில் உள்ளது. அங்குள்ள புற்றுமண் சர்வரோக நிவாரணியாகும்.

    * கீழ்பெரும்பள்ளம்

    கேது சேஷத்திரம் - இங்கும் பரிகாரம் செய்து வைக்கப்படுகிறது. மயிலாடுதுறையிலிருந்து பஸ் வசதி உள்ளது.

    * மன்னார்சாலா - கேரளா

    எர்ணாகுளம் அடுத்த ஆலப்புழையிலிருந்து ஒரு மணி நேரம் பயணத்தில், திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் ஹரிபாடு என்னுமிடத்தில், 5 கி.மீ தொலைவில் மன்னார்சாலா உள்ளது.

    * பாம்பு மெய்காட்டு அம்பலம்

    திருச்சூரிலிருந்து மாலா என்னும் ஊரில் உள்ளது.

    ×