search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கந்தகோட்ட முருகன்"

    • இச்சிலையை வேளூர் மாரிச்செட்டியாரும் அவருடைய நண்பர் கந்தப்ப ஆச்சாரியும் நிறுவினர்.
    • அவர்கள் திருப்போரூர் சென்று கந்தபெருமானை வழிபடுவது வழக்கம்.

    சென்னை பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் மூலஸ்தானத்தில் எழுந்தருளி இருக்கும் மூலவர் பற்றிய வரலாறு மிகவும் சுவையானது.

    இச்சிலையை வேளூர் மாரிச்செட்டியாரும் அவருடைய நண்பர் கந்தப்ப ஆச்சாரியும் நிறுவினர்.

    அவர்கள் திருப்போரூர் சென்று கந்தபெருமானை வழிபடுவது வழக்கம்.

    ஒரு முறை இது போன்று திருப்போரூருக்கு செல்லும் பொழுது அருகில் களைப்பாற ஒரு மரத்தடியில் படுத்தனர்.

    அப்போது, வேளூர் மாரிச்செட்டியார் கனவில் ஸ்ரீகந்தசாமி தோன்றி, தாம் அருகில் உள்ள புற்றில் இருப்பதாகவும்,

    தன்னை எடுத்துச் சென்னைக்கு சென்று நிறுவி கோவில் கட்டுமாறும் பணித்தார்.

    அவ்வாறு அவர்கள் இப்போது கந்தகோட்டம் உள்ள இடத்தில் குளித்துவிட்டு மீண்டும் சிலையை எடுக்க முயன்ற போது

    எடுக்க முடியவில்லை எனவே இது தான் ஸ்ரீகந்த பெருமானின் திருவுள்ளம் போலும் எனக்கருதி, அங்கேயே கோவில் கட்டினர்.

    இதிலிருந்து புற்றிலிருந்து வெளிப்படும் இறைவனுக்கு தனிமகத்துவம் உள்ளது என்பதை அறியலாம்.

    ×