search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்புக்கல்"

    • மறுநாள் அரசமரத்தடியில் மேடை அமைத்து அதன்மேல் பாம்புக்கல்லைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
    • இவ்வாறு பிரதிஷ்டை செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்புகின்றனர்.

    சிவாலயங்களில் வழிபாடு செய்துவிட்டுப் பிரகாரத்தைச் சுற்றி வரும் பொழுது ஒரு புறம் அரச மரத்தடியை காணலாம்.

    அரச மரத்தடியில் விநாயகர் சிலையும், பாம்பு கல்லும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதை பல கோவில்களில் காணலாம்.

    பாம்புக்கல்லில் இரண்டு பாம்புகள் பின்னி இணைந்திருப்பதையும் நடுவில் சிறிய சிவலிங்கம் இருப்பதையும் காணலாம்.

    பாம்புக்கல்லில் உள்ள பாம்பு போல தம்பதியர் இணைந்து, விநாயகரின் அருளாலும், வேப்பமரங்களின் மருத்துவ சக்தியாலும் மகப்பேறு பெறலாம் என்பது தத்துவம்.

    அரசமரம், விநாயகர், பாம்புக்கல் இந்த மூன்றையும் ஒருங்கே வலம் வந்து வழிபடவேண்டும்.

    திங்கட்கிழமை அமாவாசை வந்தால் அன்று வழிபாடு செய்வது சிறப்பு உடையது.

    வழிபாடு செய்யும் பொழுது ஏழுமுறை வலம் வரவேண்டும். ஒரு சிலர் கடும் விரதம் இருந்து 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.

    பாம்புக் கல்லைப் பிரதிஷ்டை செய்ய விரும்பினால் முதல்நாள் அதை தண்ணீரில் மூழ்கி இருக்கச் செய்ய வேண்டும்.

    மகப்பேறு வேண்டி பிராத்தனை செய்து கொண்ட தம்பதிகள் அந்த குறிப்பிட்ட முதல் நாள் இரவு உணவு உட்கொள்ளக்கூடாது.

    மறுநாள் அரசமரத்தடியில் மேடை அமைத்து அதன்மேல் பாம்புக்கல்லைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

    இவ்வாறு பிரதிஷ்டை செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்புகின்றனர்.

    ராமேஸ்வரத்தில் பாம்புக் கல்லை பிரதிஷ்டை, செய்வது விசேஷம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜர் ஆலயத்தில் எண்ணற்ற பாம்புக்கற்கள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.

    ×