search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "133 அடி"

    • தேனி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையின் காரணமாக முல்லை ப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது
    • இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 132.60 அடியாக உள்ளது. மாலையில் 133அடியை எட்டும்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையின் காரணமாக முல்லை ப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 120 அடியாக இருந்த நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 132.60 அடியாக உள்ளது. 2407 கன அடி நீர் வருகிறது. 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இன்று மாலைக்குள் 133 அடியை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கம்பம் பள்ள த்தாக்கு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    மழை கைகொடுக்கும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் 142 அடி வரை உயரும் என எதிர்பார்த்துள்ளனர். இதனால் அவர்கள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    வைகை அணையின் நீர் மட்டம் 69.42 அடியாக உள்ளது. 705 கன அடி நீர் வருகிறது. 1899 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.54 அடியாக உள்ளது. 133.30 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 4, தேக்கடி 0.2, சோத்துப்பாறை 5 மி.மீ மழை அளவு பதிவாகி யுள்ளது.

    ×