search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளநிலை உதவியாளர் பணி"

    • இளநிலை உதவியாளர், உதவியாளர் காலிபணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தேனி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் அறிக்கை வெளியிடப்பட்டது.
    • எழுத்துதேர்வு டிசம்பர் 24-ந்தேதியன்று காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை தேனி மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது.

    தேனி:

    கூட்டுறவு சங்கங்களில் பதிவாளர் கட்டு ப்பாட்டின்கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் , கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு அச்சகங்கள், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம மற்றும் இதர சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், உதவியாளர் காலிபணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தேனி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் அறிக்கை வெளியிடப்பட்டது.

    இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்ப தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்பட்டன. இதற்கான எழுத்துதேர்வு டிசம்பர் 24-ந்தேதியன்று காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை தேனி மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது. இதற்கான கல்விதகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

    கூட்டுறவில் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் நேரடி பயிற்சி , அஞ்சல் வழி, பகுதிநேர பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    எழுத்துதேர்வு கொள்குறி வகையில் 200 வினாக்களுடன் 170 மதிப்பெண்களுக்கான தேர்வாக இருக்கும். மேலும் இதுதொடர்பான விபரங்களுக்கு தேனி மாவட்ட ஆட்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் விபரம் தெரிந்து கொள்ளலாம் என தேனி மாவட்ட இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    ×