search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் திறந்து வைத்தார்"

    • ரூ.3.4 கோடி மதிப்பீட்டில் 9 புதிய மருத்துவ கட்டடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
    • அரசு மருத்துவமனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 15 மருத்துவ கட்டடப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.3.4 கோடி மதிப்பீட்டில் 9 புதிய மருத்துவ கட்டடங்களை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மேயர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார்கிரியப்பனவர் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது அமைச்சர் மா.சுப்பிரணியன் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் திருப்பூர் மாநகராட்சியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற பொது சுகாதார ஆய்வுக்கூடம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.30 லட்சத்தில் கேத்தணூர் துணை சுகாதார நிலையம், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வடமலைபாளையம் துணை சுகாதார நிலையம், ரூ.30 லட்சத்தில் கெங்க நாயக்கன்பாளையம் துணை சுகாதார நிலையம், ரூ.30 லட்சத்தில் எலவந்தி துணை சுகாதார நிலையம்,தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வரப்பாளையம் துணை சுகாதார நிலையம், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கணியூர் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பெருமாநல்லூர் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.22.75 லட்சம் மதிப்பில் செம்மிபாளையம் செவிலியர் குடியிருப்பு கட்டிடம் என ரூ.3.4 கோடி மதிப்பில் 9 புதிய மருத்தவ கட்டடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் 17 துணை சுகாதாரநிலைய கட்டிடங்களும், ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் 3 ஆரம்ப சுகாதார நிலையங்களும், ரூ.25.50 லட்சம் மதிப்பீட்டில் 2 அரசு மருத்துவ மனைகளில் பல்வேறு பிரிவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ரூ.83.73 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 15 மருத்துவ கட்டடப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் திருப்பூர் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொடர் சிகிச்சையாக 33,78,651 நபர்கள் பயன்பெற்று வருகின்றனர். 454 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 23,575 நபர்கள் பயன்பெற்றுள்ளனர். இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் ரூ.5,39,84,627 மதிப்பீட்டில் 4,820 நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.கலைஞர் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 119 சிறப்பு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 81,198 நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.

    கோயமுத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டிஊராட்சியில் இருதய நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு இதயம் காப்போம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் இருதய பாதுகாப்பு மருந்துகளான ஆஸ்பிரின்-2, க்ளோபிடோக்ரல் – 4, அட்ரோவாஸ்டாட்டின் 8 என 14 மாத்திரைகள்வழங்கப்படும்.திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டம் 139 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் 15 துணை சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு 154 நபர்கள் பயன்பெற்றுள்னர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், தாய்மார்களுக்கு தாய் சேய் நல பெட்டகத்தினையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை செல்வ விநாயகம், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஷ்குமார், மண்டலத்தலைவர்கள் கோவிந்தசாமி , இல.பத்மநாபன் கோவிந்தராஜ், உமா மகேஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    ×