search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடித்து ரசாயனம் வெளியேற்றம்"

    • நச்சு புகையால் பொதுமக்கள் அவதி
    • அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த தென்கடப்ப ந்தாங்கலிலிருந்து முசிறி செல்லும் சாலையில் கடந்த சில வருடங்களாக தனியாருக்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 10 பேர் வேலை செய்து வருகின்றனர்.

    தோல் தொழிற்சாலை, பேப்பர் தொழிற்சாலை ஆகியவற்றில் கழிவு நீரை சுத்தம் செய்வதற்கு இந்த பாலி அலுமினியம் குளோரைடு ரசாயனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இதனை ராணிப்பேட்டையை சுற்றியுள்ள தோல் தொழிற்சாலைகளில் கழிவு நீரை சுத்தம் செய்வதற்கு இங்கிருந்து கேன்களில் அனுப்பப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள 12 பெரிய அளவிலான பிளாஸ்டிக்டேங்குகளில் ரசாயனம் தேக்கி வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் ரசாயணம் தேக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டேங்க் திடீரென உடைப்பு ஏற்பட்டு ரசாயனம் கசிந்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து தொழிற்சாலையில் இருந்த வர்களுக்கு மூச்சுத் திணறல் ,கண் எரிச்சல் ஆகியவை ஏற்பட்டது மேலும் ரசாயனம் வெளியே றியதால் அப் பகுதியை சுற்றி பனிமூட்டம் போல் வென் புகை காணப்பட்டது.

    காவலாளி ஒருவருக்கு மட்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவர் உடனடியாக மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுபற்றி ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து டேங்கில் தண்ணீர் பாய்ச்சி அடித்தனர்.

    ரசாயனம் அருகில் முசிறி கிராம சாலையில் சென்றதால் அந்த வழியாக சென்றவ ர்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது.

    தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய ரசாயனத்தின் வீரியத்தை குறைக்க அதன் மீது மண் கொட்டி மூடப்பட்டது. சம்பவ இடத்தை வாலாஜா தாசில்தார் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். ரசாயனம் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை, இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×