search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டுப்புற கலைகள் விழிப்புணர்வு"

    • பாடல்கள் மூலமாகவும் பறை, சிலம்பாட்டம், கரகாட்டம் மூலம் நடித்துக் காட்டி விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.
    • ந்நிகழ்ச்சி மூலம் மாணவர்கள் கரகாட்டம் மற்றும் பறையை தாமாகவே முன்வந்து மேடையில் நிகழ்த்தினர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதற்கு தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை தாங்கினார். முன்னதாக மாணவர் அருண்குமார் வரவேற்புரை ஆற்றினார். முதுகலை தமிழ் ஆசிரியர் மணிகண்டன் நாட்டுப்புற கலைகள் நிகழ்ச்சி பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் செந்திவேலன், நாட்டுப்புற கலைகள் பயிற்றுநர் தங்கப்பாண்டி ஆகியோர் அழிந்து வரும் அரிய கலைகள் பற்றிய விழிப்புணர்வினை பாடல்கள் மூலமாகவும் பறை, சிலம்பாட்டம், கரகாட்டம் மூலம் நடித்துக் காட்டி விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சி மூலம் மாணவர்கள் கரகாட்டம் மற்றும் பறையை தாமாகவே முன்வந்து மேடையில் நிகழ்த்தினர்.

    மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளை மாணவிகள் ஜனனி, அபிஷாரணி ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ் ஆசிரியர்கள் வீரமுத்து, தமிழ்ச்செல்வி, வினோலா செலின் ஆகியோர் செய்திருந்தனர்.இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி சிரில் கேத்தரின் நன்றி கூறினார்.

    ×