search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோளிங்கர் யோக நரசிம்மர்"

    • மாலையில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும்.
    • பொங்கல் கழிந்த மறுநாள் கனுப்பரிவேட்டை உற்சவம் நடைபெறும்.

    சோளிங்கர் தலத்தில் தைப்பொங்கல் திருநாளில் காலையில் பெருமாள் ஆண்டாளுக்கு அலங்காரத் திருமஞ்சனம் நடைபெறும்.

    மாலையில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும்.

    போகிப்பண்டியைன்று தான் எல்லா ஊர்களிலும் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும்.

    ஆனால் இவ்வூரில் மட்டும் தைப்பொங்கல் திருநாளில் ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுவது விசேஷம்.

    இது கந்தாடை பெரியப்பங்கார் உபயமாகும்.

    இவ்வாறு திரு ஆடிப்பூரத் திருக்கல்யாணம், சங்கராந்தித் திருக்கல்யாணம், ஆழ்வார் திருவடி தொழல் ஆகிய மூன்று நாட்களிலும் தொட்டாச்சார் வம்சத்தவர்க்கு முதல் தீர்த்தகாரர்களுக்கு இரட்டை மரியாதை நடைபெறும்.

    பொங்கல் கழிந்த மறுநாள் கனுப்பரிவேட்டை உற்சவம் நடைபெறும்.

    இதனை மேற்குத்திக்குப் பரிவேட்டை என்றும் கூறுவர்.

    விடியற் காலையில் பெருமாள் தனித்துத்தலைப்பாகை, குற்றுவாள், கேடய அலங்காரத்துடன்

    கிளிக்கூண்டில் புறப்பாடு காண்பார் கண்டருளி மேற்குத்திசைக் கிராமங்களுக்குச் செல்வார்.

    திரும்பும் போது எறும்பி எனும் அசுவரேந்தபுரம் கிராம மண்டபத்தில் திருவாராதளம், திருப்பாவை நடைபெறும்.

    பின்னர் திருப்பாவை சாற்று தீர்த்த விநியோகம் நிகழும்.

    • திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் சோளிங்கர் நரசிம்மப் பெருமானை அக்காரக்கனி என்றே அழைத்துள்ளனர்.

    பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்

    கொண்டங் குறைவாயார்க்கு கோவில் போல் வண்டு

    வளம்கிளரும் நீர்சோலை வண்பூங் கடிகை

    இளங்குமரன் தன்விண்ணகர்.

    பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி. 61

    மிக்காளை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்

    புக்காளைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையைத்

    தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த

    அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே.

    திருமங்கைஆழ்வார் பெரியதிருமொழி. 8-9-4.

    எக்காலத் தெந்தையாய் என்னுள் மன்னில்

    மற்றெக் காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்

    மிக்கார் வேதவிமலர் விழுங்குமென்

    அக்காரக் கனியே உன்னையே யானே.

    நம்மாழ்வார் திருவாய்மொழி. 2-9-8.

    திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் சோளிங்கர் நரசிம்மப் பெருமானை அக்காரக்கனி என்றே அழைத்துள்ளனர்.

    பேயாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் கடிகை என்றே சோளிங்கரைக் குறிப்பிட்டுள்ளனர்.

    • சோளிங்கபுரக் கல்வெட்டுகள் 1896 மற்றும் 1952, 53-ம் ஆண்டுகளில் தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்டன.
    • வரதராஜப் பெருமாள் கோவில் கட்டப்பட்ட விவரம் சின்னமலை அனுமார் கோவில் நுழைவாயிலில் உள்ளது.

    சோளிங்கபுரக் கல்வெட்டுகள் 1896 மற்றும் 1952, 53-ம் ஆண்டுகளில் தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்டன.

    நரசிம்மர் குறித்த முக்கிய விவரங்களை மட்டுமே இங்கே காண்போம்.

    வேங்கடபதிதேவ மகாராயர் ஆட்சியின் போது சக ஆண்டு 1527 தை மாதத்தில் கந்தாடை அப்பய்யங்கார் விருப்பப்படி

    அக்காரக்கனி நரசிங்கப்பெருமாளுக்கு அமுது படிக்குத்தானம் செய்தவர்

    சின்ன திம்மய்யன் மகன் சின்ன நாராயணப்பர் ஆவார்.

    மடைப்பள்ளியில் உள்ள கல்தொட்டியில் தெலுங்குக் கல்வெட்டு உள்ளது.

    அதில் கந்தாளப்ப என்றுள்ளது. சங்கு சக்கரத்துடன் தென்கலை நாமம் பொறிக்கப்பட்டுள்ளது.

    கி.பி. 1619-ல் கடிகாசலத்தில் சப்தரிஷி கோவிலும் வரதராஜப் பெருமாள் கோவிலும் கட்டப்பட்ட விவரம்

    சின்னமலை அனுமார் கோவில் நுழைவாயிலில் உள்ளது.

    ஊர்க்கோவில் நுழைவாயிலில் உள்ள தமிழ் மற்றும் தெலுங்குக் கல்வெட்டுக்கள் சாத்தாத

    வைஷ்ணவர் தக்கான் துவஜரோஹணத்தன்றும் தொட்டராசர் திருநட்சத்திரத் தன்றும்

    தீபாராதனை செய்ய பொன் வழங்கப்பட்டதைக் கூறுகின்றன.

    கி.பி 1633-ல் கிருஷ்ண ஜெயந்தி உரியடி போன்ற விழா செலவுகளுக்கு முதலீடாக 200 காசுகளைப் பாவாடை தம்மு நாயக்கர் ராம தேவராயர் அளித்ததை ஒரு சாசனம் கூறுகிறது.

    கி.பி. 1633-ல் ராமராஜா என்பவர் நிலத்தானம் செய்துள்ளார். அக்கார நரசிங்கப்பெருமான் திருவமுது படைக்கவும் 12 ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உணவிடவும் இத்தானம் பயன்பட்டது.

    13.6 1595-ல் கூடிய வேங்கடபதிராயர் கல்வெட்டு முதன் முதலில் சோளிங்கபுரம் பெயரைச் சுட்டுகிறது.

    கி.பி. 1637-ல் வெட்டப்பட்ட சாசனம் தக்கான் நாச்சிமர பூசைக்கும் பிரம்மோற்சவம் முதலிய விழாக்களுக்கும் சாத்தாத அலமேலம்மங்கார் முதலீடு அளித்துள்ளார் என்கிறது.

    2-5-1717-ல் ஆண்டாள் சிலை புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    • சோளிங்கர் நகரின் மையப்பகுதியில் பக்தோசிய சுவாமி திருக்கோவில் உள்ளது.
    • இவ்வூரில் பெரியமலை உச்சியில் யோக நரசிம்மர் திருக்கோவில் உள்ளது.

    தொண்டை மண்டலத்தில் உள்ள 22 வைணவத் தலங்களில் ஒன்றாகவும் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் கருதப்படும் கோளிங்கபுரம் தற்போது சோளிங்கர் என அழைக்கப்படுகிறது.

    வேலூர் மாவட்டத்தில் வாலாஜாப்பேட்டை-அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சோளிங்கரில் ரெயில்வே நிலையமும் உள்ளது.

    சென்னை-பெங்களூர் ரெயில்வே மார்க்கத்தில் அமைந்துள்ள சோளிங்கர், திருக்கடிகை அல்லது கடிகாசலம் என முன்பு வழங்கப்பட்டுள்ளது.

    சோளிங்கர் நகரின் மையப்பகுதியில் பக்தோசிய சுவாமி திருக்கோவில் உள்ளது.

    இங்கு யோக நரசிம்ம சுவாமியின் உற்சவப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    சோளிங்கர் நகருக்குத் தெற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் கொண்டபாளையம் என்ற சிற்றூர் உள்ளது.

    இவ்வூரில் பெரியமலை உச்சியில் யோக நரசிம்மர் திருக்கோவில் உள்ளது.

    மலைக்கோவிலின் நீளம் 200 அடி. அகலம் 150 அடி. உயரம் 750 அடியாகும்.

    சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக்கோவிலுக்குச் செல்ல 1305 படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.

    பெரியமலைக்கு எதிரில் உள்ள சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேயசுவாமி திருக்கோவில் உள்ளது.

    150 அடி நீளமும் 250 அடி அகலமும் கொண்ட இக்கோவிலை அடைய 406 படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.

    உயரம் 350 அடியாகும். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பக்தோசிதசுவாமி கோவில்

    சுமார் 2 ஏக்கர் பரப்பில் 300 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்டுள்ளது.

    ×