என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சில்க்யாரா சுரங்கப்பாதை"
- மீட்புப் பணிகளை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று பார்வையிட்டார்.
- மீட்கப்பட்டவர்களிடம் மாநில முதல் மந்திரி கலந்துரையாடினார்.
உத்தரகாசி:
உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவந்தது.
கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து இன்று 17-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவடைந்தது. தொழிலாளர்களை மீட்க தயார் நிலையில், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, தொழிலாளர்களின் உறவினர்கள் சுரங்கத்தில் குவிந்தனர்.
இதற்கிடையே, முதல் கட்டமாக 5 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட உள்ளது. மற்றவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மீட்புப் பணிகளை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று பார்வையிட்டார். மீட்கப்பட்டவர்களிடம் முதல் மந்திரி கலந்துரையாடினார்.
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue: CM Pushkar Singh Dhami meets the workers who have been rescued from inside the Silkyara tunnel. pic.twitter.com/5gZHyuhrqF
— ANI (@ANI) November 28, 2023
- கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கினர்.
- தொடர்ந்து இன்று 17-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
உத்தரகாசி:
உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவந்தது.
கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து இன்று 17-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் 41 பேரில் 15 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். உத்தர பிரதேசம் (8), பீகார் (5), ஒடிசா (5), மேற்கு வங்காளம் (3), உத்தரகாண்ட் (2), அசாம் (2), இமாசல பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.
அவர்களை மீட்க 57 மீட்டர் இடிபாடுகளுக்குள் குழாய்களை செலுத்தி மீட்கும் பணி நடந்தது. முதல் தடவை நடந்த முயற்சியில் எந்திரம் பழுது அடைந்ததால் அதிநவீன ஆகர் எந்திரம் கொண்டு வரப்பட்டு துளையிட்டு குழாய் அமைக்கும் பணி நடந்தது.
அதுவும் பழுதாகியதால், செங்குத்தாக துளையிடும் பணி நடைபெற்றது.
இதற்கிடையே, தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவடைந்தது. தொழிலாளர்களை மீட்க தயார் நிலையில், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, தொழிலாளர்களின் உறவினர்கள் சுரங்கத்தில் குவிந்துள்ளனர்.
சுரங்கத்திற்குள் சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொழிலாளர்கள் 41 பேரையும் வெளியே கொண்டுவர ஸ்ட்ரெட்ச்சர்களுடன் உள்ளே சென்றனர்.
இந்நிலையில், முதல் கட்டமாக 15 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட உள்ளது. மற்றவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
சுமார் 400 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த போராட்டத்தின் விளைவாக மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவடைந்துள்ளது.
- தொழிலாளர்களை மீட்க ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.
உத்தரகாசி:
உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவந்தது.
கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து இன்று 17-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவடைந்துள்ளது. தொழிலாளர்களை மீட்க தயார் நிலையில், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொழிலாளர்களின் உறவினர்கள் சுரங்கத்தில் குவிந்துள்ளனர்.
சுரங்கத்திற்குள் சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தொழிலாளர்களை வெளியே கொண்டுவர ஸ்ட்ரெட்ச்சர்களுடன் உள்ளே சென்றனர். அங்கு தற்காலிக மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தொழிலாளர்களை மீட்டு கொண்டு வந்தவுடன், அவர்களுக்கு இங்கு பரிசோதனைகள் செய்யப்படும்.
ஏதாவது பிரச்சினைகள் கண்டறியப்பட்டால் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க 8 படுக்கைகளும் தயாராக உள்ளன. மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவும் அங்கு பணியில் உள்ளது. சுரங்கத்தின் வாயில் அருகே ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளது. சுரங்கத்தில் இருந்து மீட்டு கொண்டு வரப்படும் தொழிலாளர்களை வரவேற்பதற்காக மாலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்நிலையில், உத்தரகாண்ட் சுரங்கத்தில் தொழிலாளர் ஒருவரை மீட்க 5 நிமிடங்கள் ஆகும். 41 தொழிலாளர்களையும் வெளியே கொண்டுவர 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும். மீட்புப் பணியை ஒருங்கிணைக்க தேசிய பேரிடர் குழுவை சேர்ந்த 3 குழுவினர் சுரங்கத்திற்குள் செல்வார்கள். தொழிலாளர்களை மீட்க அனைத்து விதமான பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் முழு வீச்சில் துளையிடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- செங்குத்தாக துளையிடும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலை பகுதியில் 4.50 கிலோ மீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. கடந்த 12-ந்தேதி தீபாவளி தினத்தன்று காலை சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 57 மீட்டர் தூரத்துக்கு இடிந்ததால் சுரங்கப் பாதையின் மையப்பகுதிக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மீட்க 57 மீட்டர் இடிபாடுகளுக்குள் குழாய்களை செலுத்தி மீட்கும் பணி நடந்தது. முதல் தடவை நடந்த முயற்சியில் எந்திரம் பழுது அடைந்ததால் அதிநவீன ஆகர் எந்திரம் கொண்டு வரப்பட்டு துளையிட்டு குழாய் அமைக்கும் பணி நடந்தது.
47 மீட்டர் தூரத்துக்கு துளையிட்டு குழாய் அமைக்கப்பட்ட நிலையில் ஆகர் எந்திரத்தின் துளையிடும் பிளேடுகள் வெடித்து சிதறி நொறுங்கி போனதால் மீட்பு பணிகளில் முடக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மலை உச்சியில் இருந்து துளை போட்டு 41 தொழிலாளர்களை மீட்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மலை உச்சியில் சாலை அமைக்கப்பட்டு நவீன எந்திரம் கொண்டு செல்லப்பட்டது. 2 இடங்களில் இருந்து துளைபோட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் காலை மலை உச்சியில் இருந்து செங்குத்தாக சுரங்கப்பாதை நோக்கி துளையிடும் பணிகள் நடந்து வருகின்றன.
மலை உச்சியில் இருந்து 41 தொழிலாளர்களும் சிக்கி இருக்கும் சுரங்கப்பாதை சுமார் 87 மீட்டர் தூரம் கொண்டதாக உள்ளது. அங்கு இருந்து செங்குத்தாக துளை போடப்பட்டு வருகிறது.
அப்படி துளையிடும் பகுதியில் 700 மி.மீட்டர் சுற்றளவு கொண்ட இரும்பு குழாய்களை உள்ளே செலுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வரை 38 மீட்டர் தூரத்துக்கு மலை உச்சியில் இருந்து செங்குத்தாக துளை போடப்பட்டு உள்ளது.
இன்னமும் 49 மீட்டர் தூரத்துக்கு மலை உச்சியில் இருந்து துளைபோட வேண்டியது உள்ளது. இன்னும் 4 நாட்கள் அதற்கு தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பக்கவாட்டில் கிடைமட்டமாக துளைபோடும் பணியில் சிக்கி இருந்த ஆகர் எந்திரத்தை அகற்றும் பணிகள் நடந்து வந்தன. இன்று காலை அந்த எந்திரம் முழுமையாக அகற்றப்பட்டது. இதையடுத்து அந்த பாதையில் ஆட்கள் மூலம் துளையிடும் பணி தொடங்கி உள்ளது.
கிடை மட்டத்தில் சுமார் 57 மீட்டர் தூரத்துக்கு சுரங்க பாதைக்குள் பாறைகள் இடிந்து விழுந்துள்ளன. அதில் ஆகர் எந்திரம் மூலம் 47 மீட்டருக்கு துளையிட்டு குழாய் பொருத்தப்பட்டு இருக்கிறது. அந்த குழாய் வழியாக 2 வீரர்கள் உள்ளே சென்று தொடர்ந்து அங்கு தோண்டும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
ஒரு வீரர் துளையிடும் பணியை மேற்கொள்வார். மற்றொருவர் அந்த இடிபாடு கழிவுகளை வெளியில் அள்ளும் பணியில் ஈடுபடுவார். இந்த பணியில் எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இப்படி ஆட்கள் மூலம் துளைபோடும் பணி சுமார் 10 முதல் 12 மீட்டர் தூரத்துக்கு செய்ய வேண்டியிருந்த நிலையில் நேற்று அந்த பணி தொடங்கியது. இன்று 2-வது நாளாக ஆட்கள் மூலம் துளையிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இன்று மேலும் 4 பேர் இணைக்கப்பட்டு 6 பேர் குழுவினர் 60 சென்டிமீட்டர் விட்டமுள்ள குழாய் மூலம் சென்று துளையிடும் பணியில் ஈடுபட்டனர்.
57 மீட்டர் தூரத்தில் இன்று மதியம் வரை 54 மீட்டர் தூரத்துக்கு தோண்டி விட்டனர். இன்னும் 3 மீட்டர் தூரமே தோண்ட வேண்டியது இருக்கிறது. மிக குறைந்த தூரமே இருப்பதால் கிடை மட்டத்தில் துளையிட்டு விரைவில் 41 தொழிலாளர்களையும் மீட்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இன்று 17-வது நாள் நடக்கும் பணிகள் இறுதி கட்ட பணிகளாக கருதப்படுகிறது. 41 தொழிலாளர்களையும் மீட்பு குழுவினர் நெருங்கி உள்ளனர். இன்னும் சில மணி நேரத்துக்குள் கிடைமட்ட சுரங்கப்பாதை மூலம் 41 தொழிலாளர்களையும் சென்றடைய முடியும் என்று மீட்பு குழுவினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே மேலும் 4 இடங்களில் இருந்து 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ள சுரங்கப்பாதை நோக்கி துளை போடும் பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம் 6 விதமாக துளை போடப்பட்டு குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எந்த பாதையில் முதலில் பணிகள் நிறைவு பெறுகிறதோ அதன் வழியாக 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே 41 தொழிலாளர்கள் சிக்கி சில்க்யாரா மலைப்பகுதியில் இன்று முதல் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இன்று பிறபகல் முதல் அங்கு மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா எச்சரித்துள்ளது. இதனால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதை தவிர்க்க மாற்று ஏற்பாடுகளை மீட்பு குழுவினர் செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி மீட்பு பணி நடைபெறும் இடத்துக்கு சென்றார். அங்கு 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்தார்.
அவரை பிரதமர் மோடி தொடர்புகொண்டு பேசினார். அப்போது இறுதிகட்ட பணிகள் தொடர்பான விவரங்களை, முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமியிடம், பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
தற்போது செங்குத்தாக துளையிடும் பனி நிறுத்தப்பட்டுள்ளது. பக்கவாட்டில் துளையிடும் எலி வளை தொழிலாளர்கள் மூலம் துளையிடும் பணியில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்