search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழமரக்கன்றுகள்"

    • சீமை கருவேல மரங்கள் அகற்று தல் மற்றும் பழமரக்கன்றுகள் நடும் பணியினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா துவக்கி வைத்தார்.
    • புதுக்கோட்டையில் இது போன்றே 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஒரு ஊராட்சி வீதம் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சி, தென்னதிரை யன்குளத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், சீமை கருவேல மரங்கள் அகற்று தல் மற்றும் பழமரக்கன்றுகள் நடும் பணியினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தென்னதிரையன் குளத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை யின் சார்பில், சீமைக்கருவேல் மரங்கள் அகற்றுதல் மற்றும் பழமரக்கன்றுகள் நடும் பணி துவக்கி வைக்க பட்டது. குளங்களில் உள்ள சீமைக்கருவேல் மரங்கள் அகற்றப்பட்டு, பழமரக்கன்று கள் நடப்பட்டுள்ளது. இதன்மூலம் இக்குளத்தில் சேகரமாகும் நீர் வீணாகா மல், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு வழிவகை ஏற்படும். மேலும் பழமரக்கன்றுகள் நடுவதன் மூலம் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள குரங்குகள் அனைத்தும் இந்த பழமரக்கன்றுகள் வளர்ந்தவுடன், இதில் உள்ள பழங்களை சாப்பிடு வதற்காக இங்கு வந்து வாழ துவங்கும். மேலும் இது குரங்குகளுக்கு வாழ்வ ழிக்கும் திட்டமாகவும் இருக்கும்.

    புதுக்கோட்டையில் இது போன்றே 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஒரு ஊராட்சி வீதம் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் தொடர்ந்து மீதமுள்ள 484 கிராம ஊராட்சிகளிலும் தொடங்கிட அரசு அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இத்திட்டம் குளங்கள், வாய்க்கால்கள், ஊரணிகள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில், வேளாண் இணை இயக்குநர் பெரிய சாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) இளங்கோ தாயுமானவன், வட்டாட்சியர் கவியரசன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×