என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சமையயல்"
- காலிஃப்ளவரில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம்.
- காலிஃப்ளவரை புதினாவுடன் சேர்த்து வெரைட்டி ரைஸ்
காலிஃப்ளவர் புற்றுநோயை குறைப்பதிலும், அப்புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக செயல்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலிஃப்ளவரில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது. இத்தகைய காலிஃப்ளவரை புதினாவுடன் சேர்த்து வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை உயர்த்துங்கள்.
தேவையான பொருட்கள்
நறுக்கிய காலிஃப்ளவர் - ஒரு கப்
சாதம் – ஒரு கப்
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
புதினா – ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய், நெய் – தலா 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும். புதினாவுடன் பச்சை மிளகாய் சேர்த்துத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் அரைத்த புதினா விழுது, உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்க வேண்டும். பின்னர் காலிஃப்ளவரைச் சேர்த்து வேகவிட்டு இறக்கவும்.
இதனுடன் வடித்த சாதம் சேர்த்து நன்கு புரட்டி எடுத்தால், காலிஃப்ளவர் – புதினா ரைஸ் ரெடி. சுவையும் அருமையாக இருக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகம் அளிக்கும். நீங்களும் உங்களது வீடுகளில் செய்துபாருங்கள்.
- அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த கட்லெட் இருக்கும்.
- குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த கட்லெட் இருக்கும் குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் என்று அளவிற்கு ஒரு அட்டகாசமான சுவையில் இந்த மயோ சீஸி கட்லெட் இருக்கும்.
நீங்கள் இன்று ஸ்நாக்சாக சாப்பிடக்கூடிய வகையில் சுவையான கட்லெட் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இது வீட்டில் மழை நேரங்களில் சுட சுட ஏதாவது சாப்பிட நினைக்கும் பொழுது நீங்கள் வழக்கம் போல் வடை, போண்டா, பஜ்ஜி என செய்து கொடுப்பதற்கு பதிலாக இந்த சுவையான மயோ சீஸி கட்லெட் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு- 4
பச்சைமிளகாய்- 2 (நறுக்கியது)
மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்
கரம் மசாலாதூள்- ஒரு ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- பொறிப்பதற்கு
பிரெட் தூள்- ஒரு கப்
மைதா- ஒரு ஸ்பூன்
மயோ- 3 ஸ்பூன்
சீஸ் - துருவியது ஒரு கப்
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு மசித்துக்கொள்ள வேண்டும். அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்தூள், கரம் மசாலாதூள், பிரெட் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் மயோனிஸ் மற்றும் துருவிய சீஸ் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மற்றொரு கிண்ணத்தில் மைதா மாவுடன் நீர் சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பிளேட்டில் பிரெட் தூளை பரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவை கையில் எண்ணெய் தடவிக்கொண்டு எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டி அதன் நடுவே மயோ, சீஸ் கலவையை வைத்து உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை மைதா கரைசலில் முக்கி எடுத்து பிரெட் தூளில் நன்றாக புரட்டி எடுத்து ஒரு பிளேட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த உருண்டைகளை எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான மயோ சீஸி கட்லெட் தயார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்