search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உருளைக்கிழங்கு சீஸ் கட்லெட்"

    • அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த கட்லெட் இருக்கும்.
    • குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

    உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த கட்லெட் இருக்கும் குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் என்று அளவிற்கு ஒரு அட்டகாசமான சுவையில் இந்த மயோ சீஸி கட்லெட் இருக்கும்.

    நீங்கள் இன்று ஸ்நாக்சாக சாப்பிடக்கூடிய வகையில் சுவையான  கட்லெட் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இது வீட்டில் மழை நேரங்களில் சுட சுட ஏதாவது சாப்பிட நினைக்கும் பொழுது நீங்கள் வழக்கம் போல் வடை, போண்டா, பஜ்ஜி என செய்து கொடுப்பதற்கு பதிலாக இந்த சுவையான மயோ சீஸி கட்லெட் செய்து கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு- 4

    பச்சைமிளகாய்- 2 (நறுக்கியது)

    மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்

    கரம் மசாலாதூள்- ஒரு ஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்- பொறிப்பதற்கு

    பிரெட் தூள்- ஒரு கப்

    மைதா- ஒரு ஸ்பூன்

    மயோ- 3 ஸ்பூன்

    சீஸ் - துருவியது ஒரு கப்

    செய்முறை:

    முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு மசித்துக்கொள்ள வேண்டும். அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்தூள், கரம் மசாலாதூள், பிரெட் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும்.

    ஒரு சிறிய கிண்ணத்தில் மயோனிஸ் மற்றும் துருவிய சீஸ் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    மற்றொரு கிண்ணத்தில் மைதா மாவுடன் நீர் சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பிளேட்டில் பிரெட் தூளை பரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவை கையில் எண்ணெய் தடவிக்கொண்டு எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டி அதன் நடுவே மயோ, சீஸ் கலவையை வைத்து உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை மைதா கரைசலில் முக்கி எடுத்து பிரெட் தூளில் நன்றாக புரட்டி எடுத்து ஒரு பிளேட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த உருண்டைகளை எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான மயோ சீஸி கட்லெட் தயார்.

    ×