search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா கூட்டணி தேர்தல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தி தேசியமொழி. டி.ஆர்.பாலு எத்தனை வருடம் அரசியலில் இருக்கிறார்.
    • தெளிவாக புரிய வேண்டும் என்றால் இந்தி படிக்க சொல்லுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.

    சென்னை:

    காங்கிரஸ், தி.மு.க. திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள 'இந்தியா' கூட்டணி தலைவர்களின் கூட்டம் டெல்லியில் கூடியது.

    இந்த கூட்டத்தில் சோனியா காந்தி அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டி.ஆர்.பாலு எம்.பி.யும் அமர்ந்திருந்தார். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் இந்தியில் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது டி.ஆர்.பாலு எம்.பி. தனது அருகே அமர்ந்திருந்த ஐக்கிய ஜனதா தள கட்சியின் மேல் சபை எம்.பி.யான மனோஜ் கேஷாவிடம் நிதிஷ்குமார் இந்தியில் பேசுவதை தமிழில் மொழி பெயர்க்க சொல்லுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.


    இந்த விஷயத்தை அந்த எம்.பி. நிதிஷ்குமாரிடம் சென்று சொன்னதும் அவர் எரிச்சல் அடைந்துவிட்டார்.

    இந்தி தேசியமொழி. டி.ஆர்.பாலு எத்தனை வருடம் அரசியலில் இருக்கிறார். எம்.பி.யாக பலமுறை இருந்துள்ளார். அவருக்கு இந்தி தெரியத்தானே செய்யும். தெளிவாக புரிய வேண்டும் என்றால் இந்தி படிக்க சொல்லுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.

    இந்த கூட்டத்தில் தமிழில் மொழிபெயர்க்க தேவையில்லை என்றும் நிதிஷ் குமார் கூறியதாக இணைய தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகிறது.

    • மெகபூபா முப்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
    • தேர்தல் வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிவு செய்யப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன.

    இந்த கூட்டணி தலைவர்கள் ஏற்கனவே 3 முறை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.

    இந்த கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று தொடங்கியது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கூட்டணி தலைவர்கள் வந்துள்ளனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி, டி.ஆர்.பாலு, சீத்தாராம் யெச்சூரி, சரத்பவார், லாலு பிரசாத், நிதிஷ்குமார், மெகபூபா முப்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிவு செய்யப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.







    • பா.ஜ.க. வரும் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.
    • பாராளுமன்ற தேர்தல் முடிவை பாதிக்காது.

    சென்னை:

    அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்தியில் 2-வது முறையாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. வரும் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

    அதே நேரத்தில் பா.ஜ. க.வை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு 'இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளது.

    காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 29 கட்சிகள் ஒருங்கிணைந்து நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிராக போட்டியிட திட்டமிட்டு வருகிறது.

    இதற்காக இந்தியா கூட்டணியின் சார்பில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.


    இதன் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூரிலும், 3-வது கூட்டம் மும்பையிலும் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இன்னும் பிரதமர் வேட்பாளர் யார்? என்று ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்தியா கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டம் என்னென்ன என்பது பற்றி தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.

    இதற்கிடையே மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் தனது முழு கவனத்தையும் அங்கு திருப்பியது. இதனால் இந்தியா கூட்டணிக்குள் சில சலசலப்புகள் எழுந்தன.

    மாநில தேர்தல்களில் விட்டுக் கொடுக்காமல் கூட்டணி கட்சிகள் களத்தில் நின்றதால் 3 மாநிலங்களில் பாரதிய ஜனதா எளிதில் வெற்றி பெற்றுவிட்டது.

    இதுகுறித்து தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அளித்த பேட்டியில் 3 மாநில தேர்தல் முடிவுகள் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்தான். இது பாராளுமன்ற தேர்தல் முடிவை பாதிக்காது. பொதுவாக சட்டமன்ற தேர்தலின்போது மாநில பிரச்சினைகள்தான் தலைதூக்கி காணப்படும். அவைதான் இத்தகைய முடிவுக்கு காரணம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.


    ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. வென்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்குமான வாக்கு வித்தியாசம் 10 லட்சம் பேர் தான். சத்தீஸ்கரில் 6 லட்சம் வாக்குகள் தான் பா.ஜ.க. அதிகம் பெற்றுள்ளது. மத்தியபிரதேசத்தில் மட்டும் தான் 35 லட்சம் வாக்குகளை கூடுதலாக பா.ஜ.க. பெற்றுள்ளது என்று புள்ளி விவரங்களை அவர் பட்டியலிட்டு இருந்தார்.

    பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருந்திருந்தால் 3 மாநில வெற்றியை பா.ஜ.க. பெற்றிருக்க முடியாது என்பதே உண்மை.

    எனவே பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை அனைத்து மாநிலங்களிலும் ஒன்று சேர்க்கும் முயற்சிகளை இந்தியா கூட்டணி மேற்கொள்ளும். எனவே 3 மாநில தேர்தல் முடிவு இந்தியா கூட்டணிக்கு ஒரு படிப்பினை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தெரிவித்திருந்தார்.

    அதற்கேற்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் இளைஞரணி மாநாடு குறித்து தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்பாடுகள் தொடருவதாகவும், 2024 பாராளுமன்ற தேர்தல் வெற்றி களமாக நிச்சயம் அமைந்திடும் என்றும் சூசகமாக தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நாளை மதியம் 3 மணிக்கு நடைபெறுவதையொட்டி அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலின்போது ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜனதா கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு முடிந்தவரை கூட்டணி உடன்பாடு செய்து கொள்வது என்றும், பாரதிய ஜனதாவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்தினால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யோசனை தெரிவிக்க உள்ளதாக தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

    அந்தந்த மாநிலங்களில் உள்ள பிரச்சினைகளை மையப்படுத்துவது மட்டுமின்றி அகில இந்திய அளவிலான பொது பிரச்சினைகளில் பாரதிய ஜனதா செய்த தவறுகளை சுட்டிக் காட்டி பிரசாரம் செய்தாலே இந்தியா கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்ற கருத்தையும் முன்வைக்க உள்ளார்.

    எனவே அதற்கேற்ப அஜண்டா உருவாக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்து வார் என்றும் அந்த தி.மு.க. நிர்வாகி தெரிவித்தார்.

    • சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் சதவீத அடிப்படையில் உயர்ந்துள்ளது.
    • வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதற்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக மோடி கூறினார்

    நெல்லை:

    காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நெல்லையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ரெயில் மூலமாக சென்னையில் இருந்து நெல்லை வந்தார்.

    தொடர்ந்து பாளை ஜோதிபுரத்தில் கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.

    இந்த முகாமில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து நெல்லை சந்திப்பில் நடைபெற்ற மாணவர் காங்கிரஸ் பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்று பேசிய பின்னர் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் புயலால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கடலில் எண்ணெய் கழிவு கலந்ததற்கு எண்ணெய் நிறுவனத்தின் கவனக்குறைவே காரணம் இது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை விசாரணை நடத்த வேண்டும்.

    4 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் சதவீத அடிப்படையில் உயர்ந்துள்ளது.

    தேர்தலில் தோற்றாலும் இந்தியா கூட்டணி கொள்கை பிடிப்போடு செயல்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும்.

    பாராளுமன்றத்தில் அத்துமீறிய விவகாரத்தில் அவர்கள் யார்? எதற்காக வந்தார்கள்? எப்படி உள்ளே நுழைந்தார்கள் என்பது குறித்து எந்த உண்மையையும் இந்திய உள்துறை அமைச்சகம் இதுவரை தெரிவிக்கவில்லை. இது குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் அச்சப்படுகிறார். உள்துறை அமைச்சகம் அச்சப்படுகிறது. வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதற்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக மோடி கூறினார். ஆனாலும் இதுவரை இளைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என பிரதமர் உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு வங்கியின் பணப் பெட்டகம் என நீங்கள் நினைத்தால் அது தவறு.
    • காங்கிரஸ் எம்.பி. தீரஜ்சாகு ஊழல் செய்து முறைகேடாக குவித்துள்ள ரூ.300 கோடி பண மூட்டை.

    சென்னை:

    ஜார்கண்ட் மாநிலம் காங்கிரஸ் எம்.பி. தீரஜ்சாகு வீட்டில் இன்று வருமான வரித்துறை சோதனை நடந்தது. அப்போது வீட்டுக்குள் கட்டு கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணக்கட்டுகள் வீடியோவாக வெளியிடப்பட்டது.

    இந்த வீடியோவை பதிவேற்றம் செய்து தனது வலைத்தள பக்கத்தில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-


    இதை ஒரு வங்கியின் பணப் பெட்டகம் என நீங்கள் நினைத்தால் அது தவறு.

    இது காங்கிரஸ் எம்.பி. தீரஜ்சாகு ஊழல் செய்து முறைகேடாக குவித்துள்ள ரூ.300 கோடி பண மூட்டை.

    இந்தியா கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும் ஊழல் செய்வது, சனாதன தர்மத்தை வெறுப்பது என்ற 2 விசயங்களில் மட்டுமே ஒத்துப் போவார்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கோவை மண்டலத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • மாவட்டங்களுக்ககான கலந்தாய்வு கூட்டம் சேலம் ஓமலூரில் எம்.ஆர்.பி. இன்று பிற்பகல் நடைபெறுகிறது.

    சேலம்:

    திருச்சியில் வருகிற 23-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது.

    இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று கோவை மண்டலத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

    அதன் தொடர்ச்சியாக சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்ககான கலந்தாய்வு கூட்டம் சேலம் ஓமலூரில் எம்.ஆர்.பி. முத்துமகால் திருமண மண்டபத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் .திருமாவளவன் சிறப்புரையாற்றுகிறார்.

    • 5 மாநிலங்களிலும் பா.ஜ.கவுக்கு மக்கள் மிகப்பெரிய தோல்வியை தருவார்கள்.
    • கவர்னர் ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது அவரது அரசியலமைப்பு சட்டவிரோத போக்கை உணர்த்துகிறது.

    கோவை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க கூட்டணி தலைவர்கள், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

    இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான அச்சாரமாக இந்த மாநாடு அமையும்.


    நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரசுக்கு சாதமாக வந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என நம்புகிறேன். கர்நாடக தேர்தலில் மக்கள் பா.ஜ.கவுக்கு பாடம் புகட்டியது போல 5 மாநிலங்களிலும் பா.ஜ.கவுக்கு மக்கள் மிகப்பெரிய தோல்வியை தருவார்கள்.

    இந்தியா கூட்டணி, பா.ஜ.கவை அப்புறப்படுத்த ஒருங்கிணைத்துள்ளது. தி.மு.க அரசுக்கு நெருக்கடி தரும் நோக்கில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சட்டசபையில் பல்கலைக்கழகம் தொடர்பாக 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, அனுப்பப்பட்ட நிலையில் கவர்னர் ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது அவரது அரசியலமைப்பு சட்டவிரோத போக்கை உணர்த்துகிறது.

    ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் இந்திரா நகரில் ஜாதி வெறியர்களால் சிறுவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பு ஆகியவை பற்றி விவாதித்து இருக்கிறார்கள்.
    • கட்சியில் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து இந்தியா கூட்டணி வெற்றிக்கு கட்சி பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே ஒவ்வொரு மாநில தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் இன்று கார்கேவை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பு ஆகியவை பற்றி விவாதித்து இருக்கிறார்கள். கட்சியில் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து இந்தியா கூட்டணி வெற்றிக்கு கட்சி பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.


    நேற்று மாலையில் கார்கேவின் 50 ஆண்டுகால தேர்தல் அரசியல் பற்றிய புத்தகத்தை சோனியா காந்தி வெளியிட்டார். அந்த புத்தக பிரதிகளை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சிறுபான்மை துறை தலைவர் ரஞ்சன் குமார் உள்ளிட்டோருக்கு கார்கே வழங்கியுள்ளார். இதற்கிடையில் முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரமும் கார்கேவை தனியாக சந்தித்து பேசி உள்ளார்.

    • நாட்டில் வேலையிழப்பு அதிகளவில் உள்ளது.
    • எல்லா கருத்து கணிப்பு முடிவுகளும் பா.ஜ.கவிற்கு சாதகமாக இல்லை.

    கோவை:

    கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    5 மாநில தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. இதில் காங்கிரஸ் தெலுங்கானாவிலும், சத்தீஸ்கரிலும் வெற்றி பெறும் என்றும், ராஜஸ்தானில் பா.ஜ.க வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது வெளி வந்துள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் பகிர்ந்து இருக்கும் படியாக இருக்கின்றது.

    கடந்தாண்டு 40,000 கார்பரேட்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வேலையிழப்பு அதிகளவில் உள்ளது.

    வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. பணவீக்கம் அதிகமாக உள்ளது. 58 சதவீத இந்தியர்கள் சொந்தமாக பணி செய்பவர்களாக உள்ளனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் இந்த பிரச்சினை பிரதிபலிக்கும். பெண்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர் தாக்கப்படுகின்றனர். வெறுப்பு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    மாநில அதிகாரத்தை பறிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது.


    ஜி 20 மாநாடு இந்தியா தலைமை வகிப்பதாகவும், முன்னிலை வகிப்பதாகவும் பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால் ஜி 20 யில் உள்ள நாடுகளில் கடைசி இடத்தில் தான் இந்தியா உள்ளது.

    யுனஸ்கோவில் அமெரிக்காவின் குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். மிகவும் தீவிரமான பிரச்சனை இந்தியாவில் நிலவி வருகிறது. இந்திய மக்களுக்காக, இந்தியாவிற்காக பா.ஜ.க வீழ்த்தப்பட வேண்டும்.

    5 மாநில தேர்தல் முடிந்தவுடன், தமிழகத்தில் கூட்டணி பணிகள், பாராளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கப்படும். எல்லா கருத்து கணிப்பு முடிவுகளும் பா.ஜ.கவிற்கு சாதகமாக இல்லை.

    சில மாநிலங்கள் சாதகமாக இருக்கின்றது. சில மாநிலங்களில் சாதகமற்ற நிலை இருக்கின்றது. இந்தியா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும்.

    தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் இருக்கிறது. அ.தி.மு.க கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை. இந்தியா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்ற பின், பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம்.

    ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப சி.பி.எம் கூட்டணிகளை முடிவு செய்துள்ளது. அது இந்தியா கூட்டணியின் வெற்றியை பாதிக்காது.

    அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்றவற்றை வைத்து மத்திய அரசு மிரட்டுகிறது. அமலாக்கத்துறை பதிவு செய்யும் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில்லை.

    அவ்வழக்குகளில் வெறும் ஒரு சதவீத வழக்குகளில் தான் தீர்ப்பு வந்துள்ளது. 8 மசோதக்களை 3 ஆண்டுகளாக கேரளா கவர்னர் நிறுத்தி வைத்திருகின்றார். கவர்னர்களை வைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை இந்திய அரசு நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×