search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்"

    • 20 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
    • வருவாய் துறையினர் தடுப்பு அமைத்து கண்காணித்து வருகின்றனர்

    காவேரிப்பாக்கம்:

    வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக பெய்து வருவதால் ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம், ஒச்சேரி, வாலாஜா ஆகிய பகுதிகளில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் ஆகியவற்றுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.

    இந்த நிலையில் நேற்று பனப்பாக்கத்திலிருந்து பன்னியூர் கூட்ரோடு செல்லும் சாலையில் உள்ள கல்பலாம்பட்டு தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

    இதனால் பனப்பாக்கத்தி லிருந்து கல்ப லாம்பட்டு, ஆலப்பாக்கம், பன்னியூர் கூட்ரோடு, சிறுவளையம், பெருவ ளையம், கர்ணாவூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லமுடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இதனால் அப்பகுதிகளிலிருந்து காஞ்சிபுரம், நெமிலி, பனப்பாக்கத்திற்கு கல்லூரி, வேலை, மருத்துவமனை செல்வதற்கு சுமார் 7 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டியுள்ளது.

    மேலும் பொதுமக்கள் யாரும் அவ்வழியே செல்லக்கூடாது என்பதற்கு நெமிலி வருவாய் துறையினர் தடுப்பு அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    மழைக்காலங்களில் தரைப்பாலம் நீரில் மூழ்குவதால் அடிக்கடி போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. எனவே மேம்பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    ×