search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிமகன்கள் மனு"

    • அரசு மதுபான கடை திறந்தால் வெளி சந்தையில் மது விற்கப்படுவது தடுக்கப்படும்.
    • கடை இல்லாததால் வெளிசந்தையில் மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

    ராணிப்பேட்டை:

    பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டும் டாஸ்மாக் கடை வேண்டாம் என்றும் பொதுமக்கள் மனு அளித்து வரும் நிலையில் குடிமகன்களின் கோரிக்கை அதிகாரிகளை வியப்படைய செய்தது.

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள முள்ளுவாடி கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான குடிமகன்கள் வந்து மது வாங்கி குடித்து பொழுதை கழித்தனர். திடீரென அந்த கடை மூடப்பட்டது.

    இதனால் அந்த பகுதி குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஊரில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் மற்றொரு டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு சென்று மது குடித்து வருகின்றனர். இதனால் பெட்ரோல் பயண செலவு ஏற்படுகிறது.

    அதன் காரணமாக தற்போது கிராமத்தில் கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு மது வாங்கும் நிலைக்கு குடிமகன்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    இதற்கு முடிவு கட்ட குடிமகன்கள் முடிவு செய்தனர். 40-க்கும் மேற்பட்ட மது பிரியர்கள் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்ததாக தெரிவித்தனர்.

    எங்கள் ஊரில் ஏற்கனவே அரசு மதுபான கடை இருந்தது. தற்போது கடை இல்லாததால் இந்த பகுதியில் நாள் முழுவதும் வெளிசந்தையில் மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

    இங்கே அரசு மதுபான கடை திறந்தால் வெளி சந்தையில் மது விற்கப்படுவது தடுக்கப்படும் மற்றும் அரசு நிர்ணயத்த விலையில் எங்களுக்கு மதுபானம் கிடைக்கும். ஆகையால் எங்கள் பகுதிக்கு அரசு மதுபான கடை அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×