search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரசாயன குடோன்"

    • நேற்று இரவு 12 மணியளவில் மின்சார இணைப்பு வந்தபோது மின் கசிவு ஏற்பட்டு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான மூலப்பொருட்கள் எரிந்து நாசமானது.

    திருவொற்றியூர்:

    மணலி-பொன்னேரி நெடுஞ்சாலையில் வைக்காடு பகுதியில் ஐசக் தியாகராஜன். என்பவருக்கு சொந்தமாக ரசாயன குடோன் உள்ளது. இந்த குடோனில் வெளிநாட்டில் இருந்து சர்ப், போர்ம், தின்னர், பி.வி.சி. போன்ற மூலப்பொருட்களை இறக்குமதி செய்து குடோனில் பாதுகாக்கப்பட்டு இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு சப்ளை செய்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 4 நாட்களாக மழை நீர் வெள்ளத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு 12 மணியளவில் மின்சார இணைப்பு வந்தபோது மின் கசிவு ஏற்பட்டு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென தீ பயங்கரமாக பரவியது. இதுபற்றி அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் தலைமையில் மணலி, மணலி புதுநகர் அத்திப்பட்டு, செங்குன்றம், மாதவரம், ஆண்டாள் குப்பம், எழும்பூர், கொளத்தூர் போன்ற 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த வீரர்கள் 10 மணி நேரமாக போராடி தீயை அணைத்து வருகிறார்கள்.

    இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான மூலப்பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனால் பொன்னேரி நெடுஞ்சாலை மணலி விரைவு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.

    தொடர்ந்து தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்து வருகின்றனர். இது குறித்து மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×