search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரைவுரெயில்"

    • புதிய ரெயில் 22 பெட்டிகளுடன் தயாராகி உள்ளது.
    • 12 தூங்கும் வசதியுடன் 2-ம் வகுப்பு பெட்டிகள், உட்கார்ந்து பயணம் செய்யும் வகையில் 12 பொதுப்பெட்டி இருக் கும்

    சென்னை:

    வந்தே பாரத் ரெயில் நாடுமுழுவதும் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றன. முழுவதும் ஏ.சி.யில் சொகுசு மற்றும் விரைவு பயணம் என்பதால் பயணிகள் மத்தியில் வந்தே பாரத்ரெயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    தெற்கு ரயில்வேயில் சென்னை-கோவை, சென்னை-மைசூரு, சென்னை-விஜயவாடா, சென்னை-திருநெல்வேலி. திருவனந்தபுரம்-காசர்கோடு உள்ளிட்ட வழித் தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் வந்தே பாரத்ரெயில் போன்று ஏ.சி. இல்லாமல் குறைந்த கட்டணத்தில் விரைவு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து சென்னை ஐ.சி.எப்.பில் வந்தே பாரத் ரெயிலில் சில மாற்றங்களை செய்து ஆரஞ்சு நிறத்தில் 22 பெட்டிகளுடன் ரெயில் உருவாக்கப்படுகின்றன. முன்னும் பின்னும் 2 முனைகளிலும் என்ஜின்களுடன் இவை தயாரிக்கப்படுகிறது.

    ஒரே நேரத்தில் இந்த 2 என்ஜின்கள் இயங்குவதால் மணிக்கு 130 கி.மீட்டர் வேகத்தில் செல்லும். ஐ.சி.எப்.பில் தயாரான இந்த முதல் ரெயில் ஏற்கனவே மேற்கு ரெயில்வேக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இது மும்பை-அகமதாபாத் இடையே சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் ஐ.சி.எப்.பில் 2-வது ரெயில் தயாராகி நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த ரெயில் வடகிழக்கு அல்லது வடக்கு மத்திய ரெயில்வே மண்டலத்திற்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த புதிய ரெயிலுக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. எனினும் வந்தே பாரத் ரெயில் போன்று உள்ள இந்த ரெயிலுக்கு அம்ருத் பாரத் என்று வைக்கப்படும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, இந்த புதிய ரெயில் 22 பெட்டிகளுடன் தயாராகி உள்ளது. மணிக்கு 130 கி.மீட்டர் வரை வேகமாக செல்லும். இதில் 12 தூங்கும் வசதியுடன் 2-ம் வகுப்பு பெட்டிகள், உட்கார்ந்து பயணம் செய்யும் வகையில் 12 பொதுப்பெட்டி இருக் கும். இந்த ரெயிலுக்கு இன்னும் முறைப்படி பெயர் வைக்கப்படவில்லை. எனினும் 'அம்ருத் பாரத்' என்று பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    ×